பக்கம்:குறட்செல்வம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸31

திருப்பிள்ளை வேண்டும் என்ற குறிப்பிட்ட குறிக் கோளோடு தவம் செய்தே அவர்கள் அப்பேற்றினைப் பேற்றார்கள். இத்தகு நோன்பினை எல்லாக் குடும்பங். களுமே நோற்க வேண்டும்.

. திருவள்ளுவர் அறிவறியும் மக்கப்பேறு என்று கூறாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு என்று கூறியமை யால், "தந்தை தாயாரின் முயற்சியால் கருவிலேயே அறிவறிந்த' என்ற குறிப்பினை உணர்த்துகின்றார். கருவிலே அறிவுடையவர்கள்-இளமைப்பருவத்திலேயே --குழந்தைப் பருவத்திலேயே கூர்ந்த மதியுடையராகத் திகழ்கின்றார்கள். திருஞானசம்பந்தர் தம் மூன்றாம் ஆண்டிலேயே திருநெறிய தமிழைப் பாடியது நினைவு கூரத்தக்கது.

கவிஞன் பாரதியும், பிறப்பிலேயே கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்றவர்கள் கருவிலேயே அறிவுடையர் என்று குறிப்பிடுகின்றார். இதனையே வள்ளுவர்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. என்ற குறம்பா வாயிலாக உணர்த்துகின்றார்.

סל סעי

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/33&oldid=1276245" இலிருந்து மீள்விக்கப்பட்டது