பக்கம்:குறட்செல்வம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. இம்மையும் மறுமையும் இன்பந் தரும்


மனித வாழ்வின் இலட்சியம் இன்மையிலும் மறுமை பிலும் இன்பம் பெறுதல். சில ஒழுக்கங்கள் இம்மைப் பயன் மட்டுமே தரும். மிகச் சிலவே இம்ம்ை மறுமை ஆகிய இரண்டுக்கும் இன்பூந் தரும்.

இருமையும இன்பம் தரும் அம் மிகச் சிலவற்றுள்ளும் - பெரும் முயற்சியின்றி எளிமையில் கைவரக் கூடிய ஒழுக்கம் இனியவை கூறல். - - - -

மனித குலத்தின் உறவுக்கும் இன்பத்திற்கும் அடிப் படை இனியவை கூறலேயாகும். இனியவை கூறினும், இனிய வார்த்தைகளைப் பேசினும், அகமும் புறமும் ஒத்துப் பேசுதல் பெரும் தவ ஒழுக்கமாகும்.

சிலர் உதட்டில் இனிய வார்த்தைகளைப் பேசுவர். ஆனாலும் அகத்தே கருப்பு வைத்து வாழ்வர். அத னாலேயே திருவள்ளுவர், சிறுமையுள் நீங்கிய இன் சொல் என்று குறிப்பிடுகின்றார். -

இதற்குச் சிறுமைப் பண்புகள் நீ சொல்லும் இன்சொல் என்றும் பொருள் காண்லாம். சொல்லும் சொற்களின் விளைவினால் தீமையில்லாததீமை பயனாத நற்சொல்லும் இன்சொல்லேயாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/40&oldid=1276340" இலிருந்து மீள்விக்கப்பட்டது