பக்கம்:குறட்செல்வம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. செய்ந்நன்றி


இறைமை என்பது நற்குணங்கள் பலவற்றின் கூட்டு. குணங்கள் பண்பு; இறைவன் பண்பி. நற்குணங்கள் பல வற்றுள்ளும் தலையாயது நன்றியறிதல். சிசிரோ என்ற பேரறிஞன் நற்குணங்களுக்கெல்லாம் தலையாக விளங்கும் நற்குணம் நன்றி காட்டுதல் என்றும் எல்லாக் கடமைகளுக்கும் மூலமுதல் நன்றி காட்டும் குணம் என்றும் கூறிச் சிறப்பிக்கிறார். -

அதாவது, ஒருவர் செய்த நன்மையை - உதவியை பாராட்டி நினைவில் கொண்டு கடிமைகளாற்றுதல், நன்றி காட்டும் ஒழுக்கம் சொல்லி வரக்கூடியதன்று. இயல்பாகவே மனிதன் கொண்டு ஒழுக வேண்டிய ஓர் ஒழுக்கம். அதனாலன்றோ திருவள்ளுவர் செய்ந் நன்றி அறிதல்' என்றே குறிப்பிட்டார்.

வாதவூரடிகள் தமது தேனமுதத் திருவாசகத்தில் அடிக்கடி நாயினை இழுப்பார். நாயினுங் கடையேன் என்ற சொற்றொடர் பெருகிக் கிடக்கின்றது திருவாசகத் தில், அதாவது, நாய்க்கு நன்றிகாட்டும் உணர்ச்சி உண்டு. பகுத்தறிவு படைத்த மனிதனாகிய எனக்கு அக் கிழான நாய்க்குள்ள குணமும் இல்லாமற் போயிற்றே என்பது குறிப்பு. நாயும்கூட மனிதனை நோக்க நன்றி. காட்டும் உணர்ச்சியில் பாராட்டக்கூடியதேயன்றி, அத னிடத்திலும் முழுமையாக நன்றி காட்டும் பண்பில்லை.

- இறைவனின் திருவருனைப் பெறுதற்குரிய வாயில்கள் கருணை கால்டுதல், நன்றி காட்டுதல் ஆகிவை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/42&oldid=1276342" இலிருந்து மீள்விக்கப்பட்டது