பக்கம்:குறட்செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸41

களேயாம். இறைவன் மகிழ்வுடன் தங்கியிருக்கும் இடங்கள், ஒன்று சொர்க்கம் அல்லது விண்ணுலகம். மற்றொன்று அமைதியான நன்றி காம்டும் பண்பிற் சிறந்த உள்ளம். ஆதலால் நன்றியறிதல்-நன்றி காம்டுதல் என்பது உலகியல் ஒழுக்கம் மட்டுமன்று. அருளியல் ஒழுக்கமுமாகும்.

உலகில் செய்யக் கூடாத பாவங்கள் பல. அவற்றை யெல்லாமே செய்தாலும், வருந்துதல், நோன்பிருத்தல் முதலியவைகள் மூலம் கழுவாய் தேடிக்கொள்ளலாம் என்றும் நன்றி மறக்கும் தவறு செய்தால் கழுவாய் இல்லையென்றும் கூறுகிறது தமிழரின் வாழ்வியல் கார்டும் புறநானூறு. -

- 'ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென' என்று கூறி, நிலமே நடுக்குற்றுப் பெயர்ந்தாலும் நன்றி மறக்கக் கூடாதென வலியுறுத்துகிறது. அது.

"கிலம்புடை பெயர்வதாயினு மொருவன்

செய்திகொன் றோர்க்கு உய்தி இல்லென - அறம்பா பிற்றே ஆயிழை கணவ' - என்றும் பேசுகிறது.

கற்றோர் ஏத்தும் கலித்தொகையும், "ஒருவன் தனக்கு இடர் வந்துற்றபோது உதவியவர்க்கு அவர்க்குத் தேவைப் படும் காலத்தே உதவாது போனால், தான்ே தான்ாகத் தேய்வான்’ என்று கூறுகிறது. நன்றி கொன்ற பாவம் இவ்வுடல் ஒழிந்த பிறகும்கூட உயிரைத் தொடர்ந்து நின்று துன்புறுத்தும் என்றும் கலித்தொகை கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/43&oldid=1276258" இலிருந்து மீள்விக்கப்பட்டது