பக்கம்:குறட்செல்வம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. எச்சத்தாற் காணப்படும்


மனித குலத்தின் விழுமிய சிறப்புக்களுள் ஒன்று தன்னை அவ்விப்பொழுது நினைந்தும், நினைவுறுத்தியும் ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்வதாகும். இவ்வாறு ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு இன்றியமையாத் தேவை பகுத்தறிவு. இங்கு பகுத்தறிவு என்பது நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்தலும், அறிதலும் ஆகும்.

அங்ங்னம் ஆராய்ந்தறிகின்ற போழ்து, சார்பின்றி ஆராய்தல் வேண்டும். செய்திக்கு உரியாரிடத்திலும், அச் செய்தியால் விளையக்கூடிய பலாபலன்களிலும் பற்றுதல் இருக்குமானால் பகுத்தறிவுத் தரத்துடன் செயல் பட முடியாது. ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்து நின்று ஆராய்வதற்குப் பகுத்தறிவு என்று பெய்ரில்லை.

எந்தவிதமான சார்பும் பற்றுக்கோடும் விருப்பும் வேறுப்பும் இன்றிச் செய்தியைச் செய்தி அளவிலேயே ஆராய்ந்து அறிதலும், அவற்றை வலியுறுத்தலும் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்துதலும் போற்றுதலுக் குரிய பண்பாடாகும். இப் பண்பாட்டையே நடுவு நிலைமை என்று அறநூல்களும் ஒழுக்க நூல்களும் வலியுறுத்துகின்றன. . ; : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/46&oldid=1276343" இலிருந்து மீள்விக்கப்பட்டது