பக்கம்:குறட்செல்வம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸47

விடக் கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும். r

அங்ங்னம் ஒழுகிய ஒருவன் அக்கொள்கையின் காசன மாகவே இறந்து பட்டாலும்கூட உலகத்து மக்கள் அக் கொள்கைக்கும் சீலத்திற்குமே உயர்வு தந்து ஒழுகுதல் வேண்டும். அந்தக் கொள்கைகள் தங்கி நின்று விளக்கம்பெற வாய்ப்பில்லாது போயிற்றே" என்று உலகத்து மக்கள் இரக்கமுறுதலின் மூலம் புகழ் சேர்ப்பர். நடுவு நிலைமையை நன்னர் நடுவு’’ என்று நெய்தற் கலி பாராட்டுகிறது. அதாவது, 'நன்மையை உடைய நடுவு நிலைமை' என்கிறது. திருவள்ளுவர்,

. தக்கார் தகவிலர் என்பர் அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

என்கிறார். இக் குறட்பாவுக்கு உரை கண்ட பரிமேலழகர் எச்சத்தை நன்மக்கள் மீதேற்றினார். அதோடு இயற்கைக்கு மாறாக-உடற்கூற்றுக்கு முரண்பாடாக மக்கட்பேறு உண்டாதலையும் இல்லாமற் போதலையும் உள்ளடக்கியும் உரை கண்டுள்ளார்.

நன்மக்கள் என்ற உரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக்

கூடியது. பின்னையது ஏற்றற்கில்லை. மணக்குடவர்

ஆரவாரத் தொழிலின் மீதேற்றினார். காளிங்கர் ஒழுக்கத்

தின்பாற் படுத்தினார். மேற்கண்ட உரைகள் அனைத்தும்

ஆராய்ச்சிக்குரியனவாகவே தோன்றுகின்றன. திருவள்ளு வரின் திருவுள்ளத்தைக் கண்ட அமைதி, தோன்றவில்லை.

மேலும், உரையாசிரியர்கள் தத்தம் காலத்தே வழக்கில்

இருந்த செய்திகளின் சார்பிலேயே உரை எழுதியிருக்

கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/49&oldid=1276268" இலிருந்து மீள்விக்கப்பட்டது