பக்கம்:குறட்செல்வம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸51

ஆம், செல்வத்திற்குப் பிறிதொரு செல்வமாகத் திகழக் கூடியது அடக்கமுடைமை. ஆதலால், எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அடக்கமுடைமை விரிந்த ஒழுக்க நெறி. ஒழுக்கத்தின் பாற் பட்டதாகவும் அடக்கத்தினைக் கருதலாம். கற்றோர் போற்றும் கலித்தொகை அடக்கம் அறிவால் சிறந்த தென ஆராயப் பெற்று முடிவு ஏற்றுக்கொள்ளப் பெற்றது’ எனக் குறிப்பிடுகிறது. .

வேண்டியவாறு ஒழுகுதலை அடக்கமின்மை என்றும், ஆற்றல் இருந்தும் அடங்கி நிற்றலே அடக்கமுடைமை என்றும் கலித்தொகை பேசுகிறது.

"புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி"

என்பது கலித்தொகை. தோற்றத்தால் புரவலன்-வாரி வழங்குவதில் வள்ளல்-எனினும் இரந்து வாழ்வோர் கூறி இரக்கின்ற பணிவான மொழிகளைச் சொல்லிப் பழகு கின்றானாம். இதற்குப் பழங்கால அரசர்கள் புலவர் களிடத்தே பழகிய முறையைச் சான்றாகக் காட்டலாம்.

'கொள்ளிக் கட்டை கூரையைக் கொளுத்தும் ஆற்றல் உடையது. ஆயினும் கூரையைக் கொளுத்தும் முன், கூரையில் செருகப் பெற்ற பொழுது அது பலருக்குத் தெரிவதில்லை. அதுபோல அதியமான் மாற்றாரை வீழ்த்தும் வல்லமையுடையோனாகக் கனத்தே தோன்றி விளங்குவான். ஆயினும் தன்னுடைய நண் பர்கள், உறவினர்கள் மத்தியில் இருக்கும் பொழுது அடங்கியே இருப்பாள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/53&oldid=1276348" இலிருந்து மீள்விக்கப்பட்டது