பக்கம்:குறட்செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

என்று அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாராட்டுகிறார். -

'இல்லிடைச் செருகிய ஞெலிகோல் போல’ என்பது ஒளவையின் வாக்கு. அடக்கமின்றி நடத்தலை தருக்கித் தலையில் நடந்தேன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கிறார். தருக்கித் திரிவோரை நெறியில் நீங்கியோர்’ என்று பேசுகின்றார் இளங்கோவடிகள்.

அதனாலன்றோ சிவநெறி விளக்க நூலாகிய சிவஞான சித்தியார். 'சைவ சீலங்களுள் முதன்மையாக எடுத்துக்கொள்ளக் கூடியது தாழ்ந்து செலல்’ என்று குறிப்பிடுகின்றது.

"தாழ்வெனும் தன்மையோடு

சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது’ என்பது சித்தியார் வாக்கு.

ஆக, அடக்கமுடைமை ஒர் உலகியல் ஒழுக்கம். ஏன்?

அருளியல் ஒழுக்கமும்கூட. அடக்கமுடைமை இம்மையில் ஏற்றம் தரும், இனிய புகழ் சேர்க்கும். மறுமையில்

திருவடி இன்பம் தரும்.

எல்லார்க்கும் கன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.

என்பது திருக்குறள்.

○ ・ ○ ○

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/54&oldid=1276349" இலிருந்து மீள்விக்கப்பட்டது