பக்கம்:குறட்செல்வம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

களுக்கு உங்பட்டு உரை எழுதுகின்றார். ஒழுக்கத்திற்கு அவர் தரும் விளக்கம் 'அவரவ்ா வருணத்திற்கேற்ற ஒழுக்கம்' என்பது வள்ளுவத்தில் இல்லாத வருணத்தைக் கூட்டிக் கலக்க முயற்சிக்கிறார்.

ஆனால் திருவள்ளுவர் கருதிய கருத்து வுே மனிதன் ஒரு பெரிய சமுதாயத்தில் ஓர் உறுப்பின்ன இருக்கவேண்டுமான்ால், அந்தச் சமுதாயம் முழுமைக்கும் நலன்தரக் கூடியதென முடிவெடுக்கப் பெற்ற அடிப் படைச் சமுதாய ஒழுக்கங்களைக் கடைப் பிடிக்கவேண்டும். குடி என்பது நாட்டின் குடிமகன் என்பதை உணர்த்துமே தவிரச் சாதியை உணர்த்தாது.

தனிமனித ஒழுக்கங்களைப் போலவே, நாட்டு ஒழுக் கங்கள் என்றும் சில உண்டு. சிறப்பாக இன்று நம் பாரத நாட்டை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னுடைய உரிமையைப் பெற மூன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். இவை இன்றையச் சூழலில் பாரதநாட்டுச் சமுதாயப் பொது ஒழுக்கம். : . ...

. இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத வேறுபாடின்றி ஒரே குலம் என்று கருதிப் போற்றுவது முதல் ஒழுக்கம்.

தன்னிச்சை வழி இயங்காமல், பலர் கருத்தறிந்து, பலரின் முடிபுக்கிணங்கி வாழும் மக்களாட்சிப் பண்பு இரண்டாவது ஒழுக்கம். அடுத்து இந்நாடு பொது வீடுஇவ் வீட்டிலுள்ள உடைமை அனைத்தும் எல்லோரும்

னுபவிப்பதற்கேயாம். சிலரிடத்து புளிச்ச ஏப்பமும், 蠶 பலரிடத்தில் பசியேப்பமும் இருப்பது-இருக்க அனுமதிப்பது நியாயமுமல்ல-நீதியுமல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/56&oldid=1276350" இலிருந்து மீள்விக்கப்பட்டது