பக்கம்:குறட்செல்வம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸57

திருவள்ளுவர், நாட்டு ஒழுக்கம் பற்றி, நகைச்சுவை ததும்பப் பேசுகின்றார்; மக்கட் கணக்கு எழுதி வைக்கும். அலுவலர், மக்கள் வரிசையில் ஒருவர் பெயரை எழுதி வைத்திருந்தார்.

ஆனால், அவரிடத்திலோ, சமுதாய ஒழுக்கம், தாட்டு ஒழுக்கம் என்பது சிறிதளவும் இல்லை. அவர் சாதிப் பகையை வளர்ப்பார். ஒன்றுவட்டு வாழ்தலுக்கு உலை வைப்பார். பிறர் கருத்தை அறிய மறுப்பார். தன் கருத்தையே சாதிப்பார். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்கின்ற சமநிலைச் சமுதாயத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். தன் லாபம் ஒன்றையே கருதுவார்.

சமுதாய பகை ஒழுக்கக் கேடுகளாகிய அழுக்காறு, வெஃகுதல், வெகுளி, புறங்கூறல், கலகம் செய்தல் ஆகியவற்றையே மேற்கொண்டு ஒழுகுவார். சமுதாய ஒழுக்கத்தை, கட்டிக் காக்கின்ற அன்புடைமை, பொறை யுடைமை, ஒப்புரவறிதல் ஆகிய இனிய ஒழுக்க நெறிகள் அவர் அறியாதன. இப்படிப்பட்ட ஒருவர் பெயர், மக்கள் கணக்கில் இருக்கிறது. - . . .

திருவள்ளுவர் சொல்கிறார். மக்கள் கணக்கிலிருந்து அவர் பெயரை நீக்கிவிடும்படி நீக்கிவிடுவது மட்டுமின்றி, இழிந்த உயிர்வர்க்கங்களுக்கு ஏதாவது கணக்கிருந்தால், .சேர்த்துக்கொள்ளும்படியும் சொல்லுகின்றார் نة الصلى الله عليه وسلم ہوی۔

- ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும். - குடிமைப் பண்பை எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர் விளக்குகிறார். பரந்த பாரதநாட்டு மக்களிடத்தில், சிறந்த குடிமக்கள் இயல்பு வளர்ந்து நாட்டு ஒழுக்கம் சிறந்து

@一4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/59&oldid=1276352" இலிருந்து மீள்விக்கப்பட்டது