பக்கம்:குறட்செல்வம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. நிலத்தியல்பு


திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். கனவிலும், கற்பனை யிலும் திளைக்கும் வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் ஒதுக்கித் தள்ளுகிறது. மேலும், திருக்குறள் உணர்ச்சி யைத் தொடுகின்றது - தூண்டுகிறது - துண்டி வளர்க் கிறது. -- . .

எனினும், உணர்ச்சிகளால் மட்டும் நடத்தப் பெறும் வாழ்க்கை இயலை-வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் மறுக்கிறது. இன்ப வேட்கை கொண்டு நடத்துகிற வாழ்க்கையைவிட, துன்பங்களால் தொடரப்பெற்ற வாழ்க்கையாயினும் நெறிமுறைப் பட்டதாக-வளர்ச்சி யுடையதாக அமைவதே சிறந்தது என்பது திருவள்ளுவர் கருத்து.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன போலத் தோன்றும். ஆனாலும், உணர்ச்சி வசப்பட்ட மக்களுக்கு அவை அரியவாம். அறிவும் தெளிவும் கொண்ட மனிதர்களுக்குத் திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் எளியன, இனியன. திருக்குறள் பொறையுடைமைப் பண்பை மிகுதியும் வற்புறுத்துகின்றது.

பொறையுடைமைப் பண்புக்கு திருக்குறள் கூறும் உவமை நிலம். நிலம் கொடிய கருவிகளால் தன்னை கொத்திக் கிளறி, கொடுந்துன்பம் இழைப்பாரையும்

வீழ்த்தாமல் தாங்குகிறது. தனது மாசற்ற மேனியில்,

மாசுகளை உண்டாக்கினாலும் பொறுத்தருளி அவர்கட்கும் வாழ்வு தருகிறது. பொறுப்பதோடு மட்டுமன்றி, அத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/61&oldid=1276366" இலிருந்து மீள்விக்கப்பட்டது