பக்கம்:குறட்செல்வம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஏன் சுற்றம் கெடும்?


குற்றம் செய்தவனுக்கு, குற்றத்திற்குத் தண்டனை. உண்டு. அதுதான்் நியாயமும் நீதியும்கூட. ஆனால் திருவள்ளுவர் ஒருவன் செய்கின்ற குற்றத்திற்காக, அவனுடைய சுற்றம் முழுவதுமே உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்று கூறியுள்ளார். இதில் என்ன நியாய்த்தன்மை இருக்கிறது என்று ஆராய்தல் வேண்டும். ஒரு தனி மின்ரிதன் உருவத்தால், தோற்றத்தால் தனி மனிதனைப் போலவே காட்சியளிக்கிறான். அவன் பருவுடல் தோற்றத்தால் தனி மனிதனே தவிர, உண்மை வில், அவன் தனி மனிதனல்லன். ஒரு தனி மனிதனிடத் தில் முக்கியமாக விளங்குவன மனமும் உள்ளமுமேயாம்.

அதாவது மனச்சாட்சியும், உள்ளத்து உணர்வுமே மனிதனின் வாழ்வில் இன்றியமையாதன. உணர்வோ அறிவோ, ஒழுக்கமோகூட, தனி தனிதனின் விளைவுகளு மல்ல; படைப்புக்களும் அல்ல. அவற்றை அவன் வாழும் மனித சமுதாயத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறான்.

உள்ளுணர்வுகளை உருவாக்குவதில், ஒரு தனி மனிதன் வாழும் . சுற்றம் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. திருவள்ளுவர் 'மனத்துளது போலக் காட்டி ஒருவருக்கு இனத்துளதாகும் அறிவு' என்கிறார். . . -

'குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகளுக்கு எல்லாம்’ என்று கம்பனும் பேசுவான். 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் வாழும் ஊரில் வாழ்தல் முப்பையும் தடுக்கும் என்று புறநானூறு பேசும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/64&oldid=1276367" இலிருந்து மீள்விக்கப்பட்டது