பக்கம்:குறட்செல்வம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. அழுக்காற்றை அகற்ற வழி


மனித வாழ்க்கையின் சிறப்பியல்புகள் உணர்வுகளாலும் குணங்களாலும் அமைவனவேயாம். பல கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப் பெறுவதால் சுவர் எழுந்து வீடு உருவாகிறது. அவ்வீட்டின் நிழல் வாழ்வதற்கு இனிமை யாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. அமைதியும் அளிக்கிறது. அதுபோல, பல்வேறு வகைப்பட்ட தல் உணர்வுகளாலும், குணங்களாலும் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, சமுதாயம் என்ற கட்டிடத்தை எழுப்புகிறது.

அவ்வாறமைந்த சமுதாய அமைப்பு இனிய அமைதி கலந்த வாழ்க்கை அமைப்பைச் சமுதாயத்திற்குத் தருகிறது. - -

நற்குணங்களிலும்கூட ஒன்றிலிருந்து தொடர்ச்சி யாகப் பல நற்குணங்களை வளர்க்கிற தாய்மை நிலை யுடைய நற்குணமுண்டு. அழுக்காறாமை, அதாவது பொறாமைப்படாதிருத்தல், ஒரு முதனிலைத் தாய்மை நற்குணம். அழுக்காறாமையை மேற்கொண்டொழுகு வதன் மூலம், அவாவை அறுக்கலாம். ஆசைகளினின்று விடுதலை பெறலாம்.

ஏளெனில், ஆசையின் தாயே அழுக்காறு. ஆசை பிலிருந்து விடுதலை பெறுவதால், வெகுளியினின்றும் விடுதலை பெறலாம். வெகுளியினின்று விலகினால் இன்னாச் சொற்களைப் பேசல், ஒறுத்தல் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/66&oldid=1276368" இலிருந்து மீள்விக்கப்பட்டது