பக்கம்:குறட்செல்வம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அதனால், குற்றங்களைச் சொல்லுதல் திது. குணங் தளைச் சொல்லவேண்டும். குற்றங்களைப் பேசவேண்டும் என்கிறார் அப்பர் அடிகள். பேசுதல் என்பது நேரில் நின்று பேசுதலைக் குறிக்கும். ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும்பொழுது அவர்தம் குற்றங்களை இனிய முறையில் எடுத்துக்காட்டிப் பேசவேண்டும் அது குற்ற முடையார் திருந்துதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனையே திருவள்ளுவரும், -

கண்கின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்னோக்காச் சொல்.

என்று குறிப்பிடுகின்றார்.

புறங்கூறுபவர்கள்-பிறர் குற்றம் பேசித் திரிபவர்கள் அறம் பேசுவது போல நடிப்பார்கள். நன்மைக்காகப் பரிந்து பேசுவதாகப் பாவனை காட்டுவார்கள். நடிப்பிலும் பாவனையிலும் மயங்குகிறவர்கள், அவர் கூற்று உண்மையோ என்று ஐயப்படுவார்கள். ஐயத்தின் வழி களங்கம் பிறக்கும். களங்கத்தின் வழி மனங்கலந்த நட்புக்

கெடும். பிரிவர்-பேதுறுவர்.

அதனாலன்றோ தமிழ் மறை, ஆழ்க தீயது: என்றோதுகிறது. தீயவர் அழிதல் அன்று. அதன்ர் லன்றோ, புராணங்களிலும்கூட, அரக்கர்கள் திமை யொழித்து நல்லவர்களாக மாறி, வளர்ச்சியுற்றுத் திருவருளுக்குப் பாத்திரமானார்கள் என்ற செய்தி ப்ே பெறுகிறது.

சொற்களால் பகை வளர்க்கும் ஒருவர் நெஞ்சம் எங்ங்ணம் அறச்சார்புடையதாக இருக்க முடியும் என்பது வள்ளுவர் கேள்வி. புறங்கூறுபவர் சொல்லை நம்ப வேண்டாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/72&oldid=1276361" இலிருந்து மீள்விக்கப்பட்டது