பக்கம்:குறட்செல்வம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. தீது உண்டோ?


மனித உலகத்தின் விழைவு இன்பமேயாம். உலகத்து இயற்கையும் இன்பமே யாம். இங்ங்னம் கூறுவ்து "இன்னா தம்ம இவ்வுலகம்' என்று முன்னோர் மொழிந்த கூற்றுக்கு முரணாகாதா? இயற்கை என்பது மாற்ற முடியாத ஒன்றேயாம்.

மாற்றுதலுக்கும், மாறுதலுக்கும் உரியன எல்லாம் இயற்கையாகா. அவை ஒருவகை செயற்கையேயாம். அதனாலேயே 'இன்னாதம்ம இவ்வுலகம்' என்று. மொழிந்தவர் அதனைத் தொடர்ந்து இனிய காண்க: என்று ஆணையிட்டார்.

இன்னாதன என, கருதத் தக்கவை பெரும்பாலும் முறைகேடான தன்னலச் சார்புகளிலும், தற்சலுகை களிலுமே தோன்றுகின்றன. முறைகேடான தன்னலச் சார்பு என்பது பிறர்க்குத் தீங்குகளைத் தந்து அவ்வழி தன்னலமாக விளங்குபவை யாகும். .. * . . . . . ,

ஆதலால் ஒரு தனி மனிதனிடத்தில் திடீரென்று குற்றங்கள் தோன்றிவிடா. அந்தக் குற்றங்களைத் தோற்றுவிப்பவர்கள்-குற்றங்கள் தோன்றுவதற்கு உரிய வாறு வாழுகிறவர்கள் தங்களுடைய குற்றங்களை எண்ணிப் பார்க்காமல் தங்களுடைய குற்றங்களின் காரண மாகப் பிறரிடம் தோன்றும் குற்றங்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறார்கள், ! - -

காவிரிநதியை தஞ்சையிலும் பார்க்கிறோம், திருச்சி யிலும் பார்க்கிறோம். அதனால், காவிரி தஞ்சையிலோ திருச்சியிலோ தோன்றுகிறது என்று சொல்ல முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/74&oldid=1276370" இலிருந்து மீள்விக்கப்பட்டது