பக்கம்:குறட்செல்வம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆராய்ந்து முடிவு செய்வதே நியதியும், நீதியும் ஆகும். இந்த ஒப்பற்ற நீதியைப் புதுமை என்றும், பொதுமை என்றும் இன்று பலர் கூறுகின்றனர். ஆன்ால் நமது.

வள்ளுவர். அன்றே கூறியுள்ளார். -

ஏதிலார் - குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. .

என்பது குறள். இந்தக் குறள் நினைந்து நினைந்து உணரத்தக்க குறள். புதுமையும் புரட்சியும் நிறைந்த குறள். நிலைபெற்ற மனித உயிர்கள் உலகத்தைப் பற்றிப் பிடித்து அலைக்கும் பகைமைக்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் அருமருந்தென விளங்கும் குறள். ஏதிலார், அயலார் என்பது பொதுவான பொருள். சிறப்பாக மாறுபட்ட பகை. உணர்ச்சி உடையவர் என்றும், பொருள் கொள்ளலாம்.

முதலில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அயலார் பகைவர் என்று கருதுதலே அடிப்படையில் தவறு. அங்ங்ணம் கருதுகின்ற பகையினாலேயே நல்லனவும் தீயனவாகத் தோன்றும். அன்புடையார் மாட்டுத் தீமையே தோன்றினாலும் நன்மையே தோன்றும். ஆதலால் ஒருவன் பிறிதொருவனை ஏதிலானாகக் கருதுதல் மூலமே. குற்றங்கள் தோன்றுவதற்குரிய களம் ஏற்பட்டுவிடுகிறது.

அடுத்து பிறரிடத்தில் காணப்படும் குற்றங்களுக்குத் தன்னிடத்தில் உள்ள குற்றங்கள் எவ்வளவுக்குக் காரண மாக அமைந்து கிடக்கின்றன என்பதைப் பார்க்கக்கூடிய தைரியம் ஏற்பட்டு சுய விமரிசனத்திற்கு உரிய அறிவு பெற்றுத் தன்னுடைய குற்றங்களை நீக்கிக் கொண்டால் பிறருடைய குற்றங்களும் நீங்கிப் போகும். அதன் மூலம் சமுதாயத்திலும் குற்றங்கள் குறையும்; நிறை பெருகும்; பகை மாறும்; பண்பு வளரும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/76&oldid=1276372" இலிருந்து மீள்விக்கப்பட்டது