பக்கம்:குறட்செல்வம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வழிப்பட்டவனாகவும் இருக்க முடியாது' என்று திருவள்ளுவர் கருதுகிறார்.

பயனில பாரித்து உரைக்கும் உரை நயனிலன் என்பதை சொல்லும் - என்று திருக்குறளைக் கொண்டு கூட்டிப் பொருள் சொல்லும்போழ்து, அமுதினும் இனிதாக இருக்கிறது கருத்துச் சுவை. சொல்லும் சொற்களோ பயனற்றவை. அதையும் சுருங்கச் சொல்லுகிறார்களா எனில், உண்ட உணவு செரித்து அடுத்த வேளை பசி தோன்றவேண்டுமே! அதுவரையில் பேச வேண்டும்; பேசித் தீர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியோடு தெருவோரத் தில் - திண்ணைகளில் உட்கார்ந்து வம்பு அளப்பவர் களுக்கு, காலத்தின் அருமை தெரியாது! * --

ஆதலால், பயனற்ற சொற்களாக இருந்தும்கூட, விரித்துரைத்து மகிழும் இயல்பு இவரிடத்தில் இருக் கிறது. இந்த அளவிலேயே திருவள்ளுவர் முடிவு கட்டச் சொல்கின்றார். என்ன முடிவு? பயனற்ற சொற்களைப் பேசித் திரிவோரை அறிவில்லாதவர் என்று கருதி, எட்டடி தூரத்தே நிறுத்து; அல்லது நெருங்காதே. நெருங்கினா லும் காது கொடுத்து விடாதே! நீதியற்றவன் என்று கருதி நீண்ட தூரத்தில் காணும் போழ்தே உன்னைக் காப்பாற்றிக் கொள் என்று திருவள்ளுவர் வலியுறுத்து கின்றார். ". . . . - -

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இக்கருத்து நடைமுறைக்கு வரவில்லை. எல்லார்க்கும் வாய் இருக் கிறது. எல்லாரும் பேசலாம் என்று பேசுகின்றார்கள். போய்க்கும் புனைந்த வடிவம் கொடுத்து மெய்யாக்கு கின்றார்கள். பொழுது போகாதவர்கள், உழைத்து வாழும் அவசியம் இல்லாதவர்கள். தற்பெருமையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/80&oldid=1276376" இலிருந்து மீள்விக்கப்பட்டது