பக்கம்:குறட்செல்வம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பலரிடம் வறுமை இருப்பதனால், வறுமையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களோ? சிலரிடமுள்ள செல்வத்தில்தான்ே நாட்டம் வைக்கிறார்கள்! ஆதலால் வெளிப்படி இருந்து காட்டி, சீக்கிரத்தில் அணைக்கப் பெறும் தீன்யவிட உள்ளிருந்து எரித்து அழிக்கும் தீமை மிகவும் கொடியது.

தீயினால் எரிவது வீடுகளேயாம். வீடுகள் மனிதனின் படைப்புகள். ஆனால் தீமையினால் அழிவதோ மனிதனே யாம். படைப்புப் பொருள்கள் அழிந்தால் திரும்பப் பட்ைக்கலாம். படைப்புக்குரிய மனிதனே அழிந்து போனால்...... இந்த வகையிலும் தீமை மிக கொடியது.

தீயினால் விளையும் தீது ஒரே வழி எல்லைக்குட்பட்ட தன்று நில எல்லைக்கும் உட்பட்டதன்று. கால எல்லைக்கும் உட்பட்டதன்று. தீமை மனித சமுதாயத் தையே அழிக்க வல்லது. ஏழேழ் தலைமுறைக்கும் அழிக்க வல்லது இந்த வகையிலும் தீயினும் தீமை கொடியது.

தீ, கூரையிலிருந்தால்கேடு. ஆனால், அடுப்பிலிருந்: தால் ஆக்கம். அணையா அடுப்பு வளம் நிறைந்த மனையின் சிறப்பு. ஆதலால், அடுப்பிலிருக்க வேண்டும். ஆனால், தீமையினால் ஒரு வழியிலும் பயனில்லை. எந்த அளவிலும் பயன் தராது. பயன் தருவதுபோலத் தோற்ற மளித்தாலும் சர்க்கரைப்பாகு தடவிய நஞ்சுருண்டையே யாம். - -

நாவில் கரும்பின் இனிமை தென்படும். உடனேயே உயிர் கொல்லும் நஞ்சும் தென்படும். தீமையினால் வரும் பயன் கள்ளுண்டு களித்தல், வரைவின் மகளிர் மயக்குஎல்லாவற்றையும்விடப் பிணத்தழுவிய முயக்கு ஆகியன போலாம். ஆக ஒருபோதும் பயன்படாது. ஆதலால், தீயைவிடத் தீமை கொடியது. அதனாலன்றோ திருவள்ளுவர். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/86&oldid=1276382" இலிருந்து மீள்விக்கப்பட்டது