பக்கம்:குறட்செல்வம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இரப்பாரும் ஈவாரும்


உயிர்கள் குறைகளினின்று விடுதலை பெற்று நிறைவைப் பெறவே மனித வாழ்க்கை தரப்பெற்றது. இந்த நிறைவைப் பெறும் சாதனங்களிற் சிறந்தது கிளர்ந்தெழும் அன்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்வது. அவ்வாறு செய்யும்போது உயிரின் தன்மை வளர்கிறது, சிறப்படைகிறது. அப்பொழுதே உயிருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாக உயிர், உயிர்த் துடிப்போடு வாழ்கிறது.

ஒர் உயிர் நலம்பெற்ற உயிரோட்டத்தோடு கூடிவாழ வேண்டுமானால் அதற்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு கள் அதிகம் தேவை. அந்த வாய்ப்புகள் இல்லையானால், உயிரின் இயல்புகளும் ஆற்றல்களும் வெளிப்படுதற்கு வழியில்லாமற் போகும். அதனாலேயே திருவள்ளுவர், இசப்பாரே இல்லாத உலகம் உயிரற்ற பாவை சென்று வந்தாற் போன்றது என்றார். - .

மனித உணர்வின் வெளிப்பாடுகள் துன்பம் கண்ட போது அழுதலும், இன்பம் கண்டபோது மகிழ்தலும் ஆகும். இத்தகு பண்பு தன்னளவினதாக இருக்கும்

பொழுது பெரிதும் பயன்தராதது மட்டுமின்றி ஆக்கமில்லா மலும் போய்விடுகிறது. பிறர் துன்பம் கண்டு நோதலும், பிறர் இன்பம் கண்டு மகிழ்தலும் பண்பாட்டின் விளைவு; உயிர் வாழ்வதற்குரிய வழி. . . .

இக் குறிப்பிலேயே திருவள்ளுவர் இர்ப்பாகும் இவ்வுலகில் இருத்தல் வேண்டும் என்று பேசுகின்றார். இரப்பார் ஏழ்மையின் காரணமாக இரக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பிறரின் அன்பு உணர்ச்சிய்ைத் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/91&oldid=1276443" இலிருந்து மீள்விக்கப்பட்டது