பக்கம்:குறட்செல்வம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



28. ஈதலும் இரத்தலும்


மனித குலம் பலவகையாலும் நெருங்கிய தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்க் கூடியதேயாகும். அறம் விளக்கும் அறநூல்களும், ஒழுக்க நூல்களும், சமய நூல்களும் ஒருமுகமாக ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன. ... ." .

தமிழ் இலக்கியங்கள்கூட ஈதலின் சிறப்பைப் பேசு கின்றன. காதலின்பத்தைவிட ஈதலால் பெறுகின்ற இன்பம் பெரிது என்பது தமிழர் கருத்து. ஈந்து வாழ முடியாத வாழ்க்கை மரணத்திலும் கொடுமையானது என்பது திருவள்ளுவர் கருத்து. -

நல்ல மனம் படைத்தவர்கள், பிறருக்கு உதவி செய்வதைப் பெரும் பேறாகக் க்ருதுவார்கள். அப்படிப் பட்ட வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப் பார்கள். குறுந்தொகையில் தலைவன் பொருள்வயிற் பிரிகின்றபொழுது, தலைவியிடத்தில் பொருள் திரட்டிக் கொண்டு கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவதாக உறுதி கூறிச் செல்கின்றான். கொடுத்த உறுதிச் சொல்லை. நிறைவேற்றாமல் தவறிவிட்டால், "இரவலர் வாரா வைகல் பலவாகுக, யான் செலவுறுதகவே' என்று குறிப் பிடுகின்றான். கொடுத்து உவந்து வாழாத வாழ்க்கை, கொடிய துன்பமான வாழ்க்கை என்பது தமிழ்க் கருத்து.

சிலர் நாள்தோறும் பலர் தம்முடைய உதவியை நாடு தலைப் பேறாக - சிறப்பாகக் கருதுவர். இரத்தல் எவ்வளவு துன்பமோ அதுபோலவே இரக்கப்படுதலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/93&oldid=1276444" இலிருந்து மீள்விக்கப்பட்டது