பக்கம்:குறட்செல்வம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. செல்வத்துட் செல்வம்


உலகியல், அருளால் வந்த விளைவு. இவ்வுலகத் தின் தோற்றமும், வளர்ச்சியும்கூட அருள் ஆக்கத்தின் பொருட்டேயாம். இவ் உலகைக் கவிந்து எழிலும், இனிமையும் தரும் இயற்கை அருளின் சின்னம். இயற் கைக்கு எழிலும் வளமும் வழங்கும் வான் மழையே அருளின் பொழிவு. -

அருளென்னப் பொழியேலோர் எம்பாவாய்' என்பது மனிமொழி. இத்தகு அருட் செல்வம் பலவற்றுள்ளும் சிறந்ததாகும்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் செல்வத்தைப் பற்றிய தவறான கருத்து மக்கள் மன்றத்தில் நிலவியது. அஃதாவது நிலம், வீடு, பொன் ஆகியவைகளையே செல்வம் எனக் கருதினர். அதனாலன்றோ இன்றையப் புற உலகில் செல்வம் நன்றாக வளர்ந்திருக்கிறது.

அறிவுச் செல்வம், அருட் செல்வம் இரண்டும் செல்வம் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்க்கத் திருவள்ளுவர் முயற்சித்தார். அது செல்வம் மட்டுமல்ல. செல்வத்துள்ளும் சிறந்தது- தலையாயது என்று வலியுறுத்துகின்றார். •. - * ,

பொருட் செல்வம் ஈட்டும் பொழுதும் துன்பம் தரும் - இழப்பிலும் துன்பந் தரும். அதுமட்டுமின்றி, பொரும் செல்வம் அருளோடு - அருள் உணர்வோடு உறவு கோள்ளர்த பொழுது குவியும். பயன்படாதவர்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/99&oldid=1509557" இலிருந்து மீள்விக்கப்பட்டது