பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆய்வுத் தமிழ் பதிப்பகம் பதிப்புரை : - - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற முத்தமிழ் பிரிவுகளில்தான் இலக்கியங்கள் படைக்கப் பெற்றன. அதனைத் தொடர்ந்து விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அறிவியல் தமிழ் என்ற புதுப்பிரிவினை ஏற்படுத்தி அறிவியல் நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன. இப்பொழுது ஆய்வுத் தமிழ் என்ற புதுப் பகுதியினை ஐந்தாவது தமிழாகத் தொடங்கி இருக்கிறோம். -- . - - - - பழங்கால இலக்கிய நூல்களை ஆய்வு செய்து இன்றைய அறிவியல் கருத்துக்களோடு ஒப்பிட்டு நோக்கி, நமது முன்னோர்கள் எவ்வளவு நுண்மாண் நுழை புலம் பெற்று விளங்கினார்கள் என்று பணியை ஆய்வு செய்து நூல்கள் வெளியிடுவது என்னும் இலட்சியமாக கொண்டிருக்கிறோம். அதற்காக உருவாக்கப்பட்டதே எங்களது ஆய்வுத் தமிழ் பதிப்பகம். எங்கள் முதல் ஆய்வு நூலாக குறளுக்குப் புதிய பொருள் என்ற நூல் வெளிவருகிறது. இந்த நூலைத் தொடர்ந்து இதுவரை எழுதப்படாத புது உரை எனத் தொடர்கிறோம். 1. திருக்குறள் புது உரை (அறத்துப்பால்) 2. திருக்குறள் புது உரை ( பொருட் பால்) 3. திருக்குறள் புது உரை (காமத்துப் பால்) 4. திரு மூலர் கற்பிக்கும் தேக நலம் - 5. திருவள்ளுவர் கற்பிக்கும் தேக நலம். 6. வள்ளலார் கற்பிக்கும் தேக நலம். 7. சிற்றிலக்கியம் கற்பிக்கும் தேக நலம். - விரைவில் வெளியிட இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். . தமிழ் அறிந்த தகை சால் பெருமக்கள் எங்கள் இலட்சிய எழுத்துப் பணிக்கு ஆதரவு தந்து உற்சாகப் படுத்தி வழிகாட்டி வாழ்த்துமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். - . . . ." - - + • м г и - rrrr --