பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9s டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சுவைக்குத் தீனிப்போடுகிற சுகம் கண்டவர்கள் எல்லாம், சுகமிழந்து, சோகம் அடைந்து, நாசமாகிப் போகிறது வாடிக்கைக் கதை. - அதுபோலவே மறுபக்கம் சொல். கனி போன்ற தீச்சொல்லைப் பயன்படுத்துவோரே அதிகம். வாதிடுதல், வம்பு செய்தல், வழக்காடுதல், வதந்தியைப் பரப்புதல், வீண் பேச்சு பேசுதல், விதண்டாவாதம் புரிதல் , இல்லாததைப் பேசுதல் எல்லாம் நாவுக்குக் கொண்டாட்டமான பழக்கங்கள். - - இவை இரண்டையும் அடக்குகிற அடக்கம்தான் அகிலத்தில் சிறந்தது என்கிறார் வள்ளுவர். - தீப்புண் ஒரிடத்தில்தான், காலம் காயத்தை ஆற்றும் நாப்புண்ணோ உடலெங்கும். காலமும் ஆற்றாது; காயமும் மாறாது. கடைசிவரை முற்றிக் கொண்டேதான் வரும் சுட்டவருக்கும் துன்பம். சுடப்பட்டவருக்கும் துன்பம். இதைப் பட்டறிவு மூலம்தான் பெறவேண்டும் என்பதுதான் படிப்பறிவுடையோரின் பொன்மொழியாக இருக்கிறது. பட்டறிவும் சுட்டறிவும் இனி நமக்கு வேண்டாம் என்று நாம் சொல்வதையும், அதையே கடைபிடிப்பதையும் ஒழுக்கமாகக் கொண்டுவிட்டால், வாழ்வில் இன்பமே அருவி யாகும் அல்லவா!