பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

і рель"с", " புதிய பொருள் 99 18. எண்ணியரும் திண்ணியரும் எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணி யராகப் பெறின் (666) இதுவரை நாம் கற்றுக் கொண்டிருக்கும் உரைகளை இங்குக் காண்போம். - - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணிணயவாறே எய்துவர். அப்படி எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின் என்கிறார் பரிமேலழகர். ஒரு செயலைச் செய்ய எண்ணுபவர்கள் உறுதியுடையவர் களாக இருந்தால் அவர்கள் எண்ணியபடியே அந்தச் செயல் நிறைவேறும் என்கிறார் நாவலர் நெடுஞ்செழியன். ஒன்றை நினைத்தவர்கள் அவற்றிற்குக் காரணமான தொழிலின்கண் திண்மையுடையவராக இருந்தால் தாம் அடைவதற்கு நினைத்த எல்லாவற்றையும் நினைத்தபடியே அடைய முடியும் என்கிறார் திருக்குறள் முனுசாமி. - ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனத் திண்மை உடையவராகப் பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவர் என்கிறார்.மதுரை இளங்குமரனார். எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்னும் சொற்களுக்கு எல்லோரின் உரைகளும் ஏறத்தாழ ஒரே பொருள்தான் காட்டுகின்றன. - எண்ணியார் திண்ணியராகப் பெறின் என்னும் சொற்களுக்கு எல்லோரின் உரைகளும் ஏறத்தாழ ஒரேபொருள் தான் காட்டுகின்றன. - - எண்ணியார் திண்ணியராகப் பெறின் என்னும் சொற்களுக்குப் பொருள் தரும்போது தான் சிறிது மாற்றம் வருகிறது. . . . . . . . . . . . திண்ணியர் என்பதற்கு தொழிற்கண் திண்மை உடைவர்