பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா என்பது வி.முனுசாமியின் பொருள். - - திண்ணியர் என்பதற்கு வினைக்கண் திண்மை உடையவர் என்பது பரிமேலழகரின் பொருள். ... " - திண்ணியர் என்பதற்கு உறுதி உடையவர் என்பது நாவலரின் பொருள். - - திண்ணியர் என்பதற்கு மனத்திண்மை உடையவர் என்பது. மதுரை இளங்குமரன் பொருள். ஏறத்தாழ எல்ல உரைகளுமே மனத்திட்பம் வினைத்திட்பம் என்றுதான் பொருள் பொழிந்து சென்றிருக்கின்றன. - இந்தக் குறள் இடம் பெற்றிருக்கும் அதிகாரம் வினைத் திட்பம் என்பதாகும். - . . - இதைச் செயல் திட்பம் என்று சொல்லாமல் வினைத்திட்பம் என்று வழங்கியதற்கு உள்ளுறை ஏதாவது இருக்க வேண்டுமல்லவா? செயல் என்பது செய்தவுடன் நடந்தவுடன் இருந்து மறைந்து போவது. வினை என்பதோ நடைபெற்று முடிந்து போன பிறகும்.கூடத் தொடர்ந்து அதற்குரிய பயனை அளித்துக் கொண்டே இருப்பதாகும். - - உண்ணுவது உறங்குவது கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது போன்றவை அன்றாடம் நடைபெறும் செயல்கள். - - - ஆனால் ஒர் செயலின் பாதிப்பு தொடர்ந்து வரும் என்பதைத்தான் வினை என்றனர். இதை மனத்தை மிகவும் பாதிக்கும் வண்ணம் பாவம் புண்ணியம் என்றனர் நமது முன்னோர்கள். - - * - - அதையே தெளிவாக நல்வினை தீவினை என்றனர் இந்த நல்வினையும் தீவினையும் தான் ஒருவருக்கு ஊழ்வினையாக மாறிஉருவாக்குகிறது. . . . . . . . ."