பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 101 கோவலன் தான் செய்த தீவினையால் காவிரிப் பூம்பட்டினத்தை விட்டுத் தன் மனைவியுடன் மதுரைக்குப் புறப்படுகிறான். அதைப் பாடிய இளங்கோவடிகள் ஊழ்வினை - வந்து உறுத்த என்று அழகாகச் சுட்டிக் காட்டுகிறார். கோவலன் கொண்ட சிற்றின்பச் செயல் வலிமையாக வளர்ந்து தொடர்ந்து அவனது வாழ்வுக்கே எமனாகிவிடுகிறது. அப்படிப்பட்ட வினையைத்தான் மிகவும் நுட்பமாகவும் திட்பமாகவும் சிந்திக்க வேண்டும். மனத்தில் வந்திருக்க வேண்டும் செயலில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார் வள்ளுவர். - - - - வள்ளுவர் இந்த அதிதாரத்தில் மனத்திட்பம் பற்றிப் பாடினார். வினைத் திட்பத்தின் பெருமை அதன் அருமை சிறப்பு பயன்சிறுமை பற்றியெல்லாம் பிரித்துப் பிரித்துவிரித்து விரித்துப் பாடினார். - , - - அதற்கெல்லாம். முத்தாய்ப்பாகத்தான் வள்ளுவர் ஒருவாகான சொல்லை இதனுள் விதைத்து வைத்தார். திண்ணியர் என்ற சொல்தான் அது. திண்மை என்றால் உறுதி, வலிமை, கலங்காநிலை மெய் என்றும் அர்த்தம். அதாவது வலிய மெய்ந்நிலை. திண்மை என்றால் மன உறுதி என்றுதான் அர்த்தம். திண்ணியன் என்கிறபோது வலிமையுடையவன், பருத்தவன், சமர்த்தன், பொருநன், திறவோன், மன்னன், வல்லவன், வல்லுநன்,வீரன் என்னும் சுவையான பொருள்கள் நமக்குக் கிடைக்கின்றன. . . எல்லோருக்கும் மனம்இருக்கிறது. இதிலே எள்ளளவும் ஐயமேயில்லை. * . மனமானது நல்ல மனமாக இருக்க வேண்டும். அதுதான் - எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. - நல்ல மனம் எங்கே கிடைக்கும்? எப்படி கிடைக்கும்?