பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - Ios உடம்பார் அழியில் உயிரால்; அழிவர் திடம்படு மெய் ஞ்ஞானம் சேரவும் மாட்டார். இங்கே திடம் பட மெய்யும் ஞானமும் சேரமாட்டார் என்பது திருமூலரின் தெய்வீக வாக்கு. படு என்பது கூர்மையாகும். திடம் மிகுந்த, கூர்மையும் நுண்மையும் நிறைந்த மெய்க்குள்ளேதான் ஞானம் இருக்கும். ஞானம் என்பது அறிவில் விரிவில் விரிவின் தெளிவில், தெளிவின் மிகுதியில் கிடைக்கும். - - எண்ணியார் என்பதற்கு நோக்கம் உடையவர், அதாவது இலட்சியவாதி என்று கூறலாம். எய்துப என்பதற்கு அடைவது என்பதை விட அம்பெய்தல் போல காரியத்தைச் செய்தல் என்று கூறலாம். எய்த என்றால் நிரம்ப நன்றாக என்று பொருள் தருவதால் நாம் இவ்வாறு பொருள் கொள்ள முடிகிறது. இலட்சியம் நோக்கம் மிகுதியாக உடைய ஒருவர் தமது உடலால் திண்ணியராக இருந்தால் தாம் எண்ணிய வினைகளை எண்ணிய படியே செய்துவிட முடியும். அம்பெய்வதற்கு உடல் வலிமை மன ஒருமை சிதையாத பார்வை குறிபார்க்கும் திறமை வேண்டும். அதுபோலவே எண்ணிய எண்ணங்களைத் திண்ணமாய்ப் பெற்றிட திண்மை மிகுந்த திண்ணிணயர் ஆக வேண்டும். திண்ணியர் ஆகப் பெறின் என்ற சொல்லைப் பாருங்கள். உடலில் வலிமை வேண்டும் என்பதை தீர்க்கமாய்க் குறித்திருப்பது தெரியும். ஆகுதல் என்பது நினைத்தவுடனே நடந்து விடுவதல்ல. தொடர்கிற முயற்சியால் துன்பத்திலும் மீண்டும் வெளிவருகிற பயிற்சியால்தான் முடியும். அதனால்தான் ஆகப் பெறின் என்றார்.