பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - வலிமையான உடலாளர்கள் வளிமான சிந்தையுடன் எண்ணி முயல்கிறபோதுதான் எண்ணியபடி நடக்கும். இப்போது குறளை மீண்டும் ஒருமுறை படிக்கலாம். எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் - திண்ணியர் ஆகப் பெறின். குறிக்கோளைக் கொள்கையாகக் கொண்டு எண்ணியவர் ஒருவர் தான் எண்ணியபடியே அந்தக் காலத்திலேயே நிச்சயமாகப் பெற முடியும். அவர் திண்மையுடைய தேகம் கொண்டவராக விளங்கினால். - -. - " நலிந்த தேகத்திற்கு முணகத் தெரியும். தன்னைத்தானே சபித்துக் கொள்ளத் தெரியும். திட்டமிடவும் தீர்மானமாக முடிவெடுக்கவும் அது சமயமல்லவே. ஆகவே திண்மையாளராக முதலில் திகழுங்கள். பிறகு, எண்ணியாராக மாறுங்கள். பிறகு என்ன வேண்டும், என்ன நடக்கும், எப்படி முடியும் என்று எண்ணுங்கள். அந்த எண்ணமே உங்களுக்கு எல்லாம் தரும். அதனால்தான் மனம் போல் வாழ்வு என்றார்கள. வள்ளுவரோஒரு படி மேலே சென்று மனம் போல வாழ்வு பெற தினந்தோறும் தேகத்தில் திண்மை பெறுங்கள். தேடுகிற நன்மையைப் பெறுங்கள் என்றார். - இந்த உண்மையை இன்று உணர்ந்து கொண்டிருக் கிறோம். வாழ்வதும் தாழ்வதும் நம் கையில்தான். ஏனென்றால், நாமே நமக்கு எதிரியும் நண்பனுமாய் இருக்கிறோம். - - -