பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oooo!_ - 105 19. மடியும் அடியும் மடியிலா மன்னவன் எய்தும் - தாஅய தெல்லாம் ஒருங்கு (610) 6ம் அதிகாரமாகிய மடியின்மையில் வருகிற 10வது குறள். இந்தக் குறளுக்கு இதமான உரையைத்தர எல்லா 9_ᎶᏡjᎫ ' ஆசிரியர்களுமே, ஒரு முகப்பட்டு முனைந்திருக்கின்றனர். என்றாலும், எது ஏற்றது என்பதில் தான் குழப்பமும் தோற்றுப் - போவது போல் படிப்பவர்க்குத் தென்படுகிறது. - * தன்னடி அளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுவதையும், மடியிலாத் அரசன் முறையர்னன்றி ஒருங்கு எய்தும் என்கிறார் பரிமேலழகர். - அதே கருத்தை அப்படியே எழுதியிருக்கிறார் திருக்குறளார். தனது அடியால் அளந்தவன் தாவிப் பற்றிய உலகப் பரப்பை எல்லாம், சோம்பல் இல்லாத ஆட்சியாளன் (இரந்து பெறுதல் இன்றி) தன் முயற்சியாலே அடைவான். (மதுரை. இளங்குமரனார்) - - சோம்பல் இல்லாத அரசன், சோம்பலின் காரணமாகப் பிற அரசர்கள் பலரையும் விட்டு முன்பு நீங்கிய செல்வத்தை எல்லாம், ஒரு சேரப் பெறுவான் என்பது உறுதிஇரா.நெடுஞ்செழியன். - - இனி எப்படி உரைகள் இடறுகின்றன என்பதை அறிவதற்கு முன்பாக, குறளின் ஏழு சொற்களுக்கும் மற்றவர் கூறிய பொருளைக் காண்போம். - மடியிலான், சோம்பல் இல்லாதவன்.மன்னவன், மன்னன் எய்தும், அடையும் அடி அளந்தான், தன்னடியால் அளந்தவன். தாஅயது. பரந்தநிலப் பரப்பு, எல்லாம் ஒருங்கு எல்லாவற்றையும் இக்குறளில் எல்லா உரை ஆசிரியர்களும் முரண்பட்ட இடம் அடி அளந்தான் என்பதில்தான்.