பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I08 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவனும் கெட்டுவிடுவான். மடி வந்தால் குற்றம் பெருகும். அழிவை நோக்கி அவனே நடப்பான். பெருமக்கள் தொடர்பு போகும். இவன் பேசுகிற பேச்சு எடுபடாமல் போகும். இவனைப் பகைவர் எளிதாக வெற்றி கொண்டு அடிமை ஆக்குவர் என்றெல்லாம் பாடிக் கொண்டு வருகிற வள்ளுவர் ஒன்பதாவது குறளில் பாடுகிறார் இப்படி. குடியினுள் ஏற்பட்ட குற்றங்களை மடியிலிருந்து வெளிப்பட்டு, செயல்பட, குற்றம் நீங்கும் என்கிறார். ஆக, சுறுசுறுப்புடன் செயல்படவேண்டும் என்கிறார். - அந்த உடல் வளம்,மனநலம், அறிவு பலம் எப்படி வரும் என்று வழிகாட்டத்தான், வள்ளுவர்.தனது பத்தாவது பாடலில், மடியிலான் என்ற வார்த்தையைத் தெளிவாகக் குறித்திருக்கிறார். மடியிலான் என்பவன் நோயற்றவன் நோயற்ற வாழ்வில் தான்குறைவற்ற செல்வம் பெறுகிறான். - நோய் ஒருவனுக்கு வந்து விட்டாலே, அவனுக்கு வாழ்க்கை மேலேயே வருத்தமும், வெறுப்பும், எரிச்சலும் கோபதாபங்களும் வந்து குவிந்து விடுகின்றன. புலம்பித் தவிப்பதும், படுத்துக் கிடப்பதும் : நாட்களை நகர்த்தித் தொலைப்பதும்தான அவனது செயல்களாகிப் போகின்றன. அவன் மடிந்து போய் விடுவதால்தான், அவனது அறிவு, வரவு, செயல்கள் எல்லாம் முடங்கிப் போய் அழிந்துபோகின்றன. - - - ஆகவேதான், மடியிலான் என்றார். நோய்படாத உடல், நூறுகோடிக்குச் சமம். உடல் நலக்தேடு இல்லாதவாழ்க்கை, உலகத்திலேயே அற்புதமான வாழ்க்கை. - - -- இப்படி ஒருவன் வாழவேண்டும். அப்படி வாழ்கிறவன் மற்றவர்களுக்குத் தலைவனாக, மன்னவனாக வாழ்கிற பெரும் , பேற்றினைப் பெறுகிறான். - சோம்பலற்றவன் சுறுசுறுப்பாக இருக்கிறான், சுறுசுறுப்பான உடலில் சுறுசுறுப்பான மனம். அப்படிப்பட்ட _ خیانت ASA SSASAS SSAS SSAS SSAS SSASATMS