பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் –ll? ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி, உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமுதமாகும். - அமுதத்துக்குரிய குணம், வாழ் நாளை நீட்டிப்பது. உணவையும் அமுதம் என்று போற்றப்படுவதும் அதனால் தான். உறவினருக்கு உணவிடுவது கடமையாகி விடுகிறது. கட்டாயமாகிவிடுகிறது. அதை உரிமையாக எடுத்துக் கொண்டு கேட்டுப் பெறுவதும். சண்டைபோட்டு வாங்கி மகிழ்வதும் இயற்கையான நடைமுறைகள்தாம். - " . இங்கே விருந்தோம்பல் என்பதில், விருந்து என்பதற்கு புதுமை, புதிய என்று அர்த்தம். - புதிதாக வருகை தருபவர்கள் , அவர்களை யாரென்று அறிந்து கொள்ளாமல் அவர்களுக்கு உதவி மகிழ்வது. விருந்தளித்தல் என்று கூறாமல், வள்ளுவர் விருந்து ஒம்பல் என்றார். அதாவது புதிய வரவிற்கு, உதவி செய்து காத்தல் என்கிற அர்த்தத்தில், அவர் இந்த சொற்களைப் பெய்துள்ளார். - - இப்போது இந்தக் குறளுக்குரிய பொருளைப் பாருங்கள். அகன் - அகமான மனம், அகன்ற - அமர்ந்து = பொருந்திய - - - செய்யாள் - இலக்குமி, அதிர்ஷ்டம், அழகு முகன் = முகம் - - - அமர்ந்து = பொருந்தி - நல்விருந்து = நல்ல விருந்து, புதுமை ஒம்புவான் = துவளாமல் காப்பவன் இல் = வீடு. செய்யாள் என்றால் இலக்குமி. இலக்குமி என்றால் அழகு, நல் வினைப் பயன் என்றும் பொருள். இந்த நல் வினை என்பதோ இன்ப துன்பங்கட்குக் காரணமானது. எதையும் எதிர்பாராமல், புதிதாக வருவர்க்கு