பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விருந்தளிப்பது என்பதற்குப் பரந்த மனம் வேண்டும், அத்ததைய விருந்துக்கு உரியவர் ஆகிற வருக்கே விருந்தர் என்றுதான் பெயர். விருந்தர் என்றால் புதியவர், விருந்தினர் என்றால் புதியோர். புதியவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், உணவளித்து, உகந்தநலம் காத்து, பாதுக ாப்பதற்கு எப்படி அந்தக் குணம் உண்டாகும்? அதற்கான பதிலைத்தான், குறளில் அகன் அமர்ந்து என்று ஆரம்பித்தார். அகம் பொருந்தினால்தான், அந்த அற்புதகுணம் வரும். எதிர்பார்த்துச் செய்கிற மனத்தில், கபடும் சூதும் கவ்விக் கொள்கிறது. சூது கலவாத தூய மனதில், செய்யாள் என்ற அழகு உறையும் என்றால் இங்கே இலக்குமி, திருமகள் என்று கூறுவது கண்ணுக்குத் தெரியாத ஒன்றை, கற்பனையான ஒன்றை மனத்தில் வந்து உறையும் என்பதைவிட, அழகு வந்து உறையும் என்கிறபோது நடைமுறைக்குரிய எதார்த்தத் தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அழகு என்றால் எதைக் குறிக்கிறது மன அழகு, குண அழகு என்று நாம் கூறலாம். - அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளே இருக்கும் அகத்தின் உணர்வுகளை முகந்து கொண்டு வந்து மற்றவர்களுக்குக் காட்டுவதால்தான், அதற்கு முகம் என்ற ப்ெயர் வந்தது. - - * -. அழகு என்பதற்குச் சுகம், சிறப்பு, செழுமை, வளம், வனப்பு, பத்திரம் என்றெல்லாம் பல பொருள்கள் உள்ளன. - மனம் பொருந்தி, மற்றவர்களுக்கு மரியாதை. செய்கிறபோதுதான், முகத்திலும் அந்த ஆன்ம ஒளி, அழகுற வெளிப்படுகிறது. . - - அப்படி நல்ல விருந்தைப் பாதுகாத்துப் பராமரித்துக் காத்தலுக்கு ஒம்பல் என்று கூறுவார்கள். - ஒம்பல் என்பதற்குத் தீது வராமல் காத்தல் என்பதுடன் மனத்தை ஒரு நிலைப்படுத்தல் என்றும் பொருள் கூறலாம். அகம் பொருந்த வேண்டும், முகம் பொருந்த வேண்டும்.