பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் II 7. உங்களுக்கு வெற்றிகள் வாழ்க்தையில் வந்து குவியும் என்று வள்ளுவர் உள்ளம்றுநினைத்த கருத்துக்களுடன், நாமும்ன வாழ்வோம். வாழ்வில் மகிழ்வோம். வற்றாத இன்பத்தில் திகழ்வோம். 21. ஐயுணர்வும் மெய்யுணர்வும் ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே மெய்யுணர்வு இல்லாதவர்க்கு (354) 36 வது அதிகாரத்தில், 4வது பாடலாக உள்ளது. அதிகாரத்தின் பெயர் மெய்யுணர்வு. - - பிறப்பு வீடுகளையும், அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களன்றி, உண்மையில் உணர்தல் என்று பரிமேலழகரும், உலகில் உள்ளனவற்றையெல்லாம் உள்ளபடியே கண்டறிந்து, ஒருவன் தனது பழுத்த பகுத்தறிவினைக் கொண்டு ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைந்து உண்மையை உணர்தல் என்று நாவலர் நெடுஞ்செழியனும், உண்மை உணர்தல் என்று மதுரை இளங்குமரனாரும் மெய்யுணர்தல் என்பதற்குப் பொருள் உரைக்கின்றனர். இனி அவர்கள் தெளிந்துரைத்துப் பார்த்த பொருளைக் காண்போம். - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான, ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம்வயத்தாய வழியும். அதனால், செய்யினை உணர்தலில்லாதார்க்கு பயனில்லையேயாம் - - - பரிமேலழகர். மெய்யுணர்வு இல்லாதவர்கள், ஐந்து புலன்களின் உணர்வுகளை அடக்கி வென்றிருந்த போதிலும், அதனால் அவர்களுக்கு நிலைத்த பலன் ஏதும் ஏற்படுவதில்லை - . . . . - - நெடுஞ்செழியன். + மெய்யறிவு இல்லாதவர்க்கு ஐம்புலன்களால் உண்டாகும் ஐவகை அறிவும் ஒருங்கே வாய்த்திருந்தாலும், அவற்றால் ஒரு பயனும் இல்லை - மதுரை இளங்குமா