பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - - 121 ஆக, ஒருவரது உண்மையான அறிவு என்ன செய்ய வேண்டும் என்றும், உடலைக் காக்க உதவ வேண்டும். உடலுக்கு வளம் சேர்க்க வேண்டும். நலம் காக்க வேண்டும். பலம் கூட்ட வேண்டும். நோயில்லாமல் நிதமும் காக்க வேண்டும். - அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, பணம்தான் இலட்சியம், உடலுறவுதான் குறிக்கோள். உலகத்தை அனுபவிப்பதே என்வாழ்க்கையின் முயற்சி என்று உழன்று, உடல் வதைப்பட்டு, பூமியிலே நரகத்தைப் பார்க்கும் உணர்வுள்ள மனிதர்களை என்ன சொல்லி அழைப்பது? ஆகவேதான், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, நல்ல உணர்வு இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. அந்த உணர்வை எல்லாம் மேலும் சிறப்புற வளர்த்துக் கொள்ள, ஆதாரமாக இருக்கும் உடலைக் காக்க வேண்டும் என்பதையே வள்ளுவர் வலியுறுத்துகின்றார். - இதைத்தான் மெய்யுணர்வு என்ற அதிகாரப் பெயராகவும் வைத்திருக்கிறார். - - உலகிலே உள்ள உண்மையான பொருள் உடல்தான். அதனால்தான் உடலை மெய் என்றனர். -- மெய்யானது உலகில் உலாவரும் வரை, வாழ்க்கை நிகழ்ச்சிகள் யாவும் மெய்தான். மெய் போய்விட்டால், எல்லாம் பொய்யாகிவிடுகிறது. - இந்த உண்மைத்தத்துவத்தைத்தான் மெய்யுணர்வு என்று. மென்மையாக மனத்தில் பதிய வைக்கிறார். மெய்யைத் தவிர, உண்மையான அறிவு வேறென்ன இருக்க முடியும்? - ஊரும் சதமல்ல, பேரும் சதமல்ல - * உற்றாரும் சதமல்ல மற்றோரும் சதமல்ல என்று சித்தர்கள் பாடியதெல்லாம் இதனால்தான். ஒருவருடைய உண்மையான உறவு முதலாவது உறவு அவரது உடல்தான். உடலை வைத்தே உலக வாழ்க்கை