பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 125 தாலும் அது இனிமை யான இசையைக் கொடுக்கும் கணையாகிய பொருள் சொன்னார்கள். ஆனால், யாழ் என்றதும் வீணை தான் நம் நினைவுக்கு வரும். இருந்தாலும் யாழ் என்ற சொல்லுக்கு ஆந்தை என்ற ஒரு பொருள் உண்டு. கணை என்றால் ஒலி என்று அர்த்தம் உண்டு. இருட்டில் மறைந்து வாழும் ஆந்தை உருவத்தால் அச்சம் ஊட்டும். அதன் உள்ளமோ வஞ்சனை நிறைந்தது. அது எழுப்பும் சத்தம் கூட கொடுமையான அச்சம் தரக்கூடியது. அதைப் போலவே பொய்த் துறவியரின் தோற்றம் மட்டுமல்ல அவரது எண்ணம் செய்கை வாழ்க்கை எல்லாமே கொடுமையானது என்று வள்ளுவர் கூறினார். நேரமோ இரவு. நெஞ்சமோ கரவு. காட்டியிருக்கும் தோற்றமோ துறவு. பாமரர்கள் ஏமாற இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? -- இந்த போலித் துறவிகளை ஆந்தை மனிதர்களை இனம் கண்டு கொள்ளுங்கள், என்று பொதுமக்களை எச்சரிக்கிற வள்ளுவர் அதே நேரத்தில் போலித் துறவிகளுக்கு நேரடியாகவே புத்திமதிகளையும் கூறுகிறார். அந்தக் குறள் தான் மழித்தலும் நீட்டலும் வேண்டா என்பதாகும். தவம் செய்வார்க்கு தலை மயிரை மழித்தலும் சடை நீட்டலுமாகிய வேலையும் வேண்டா. உயர்ந்தோர்தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தை கடிந்துவிடின் அதுவே போதுமானது என்று பரிமேலழகர் பொருள் தருகிறார். மழித்தல் என்றால் மொட்டை ஆக்கல், கூர் இன்மை ஆக்குதல், சிறப்பை அழித்தல், மிகுதியை தரைமட்டமாக்குதல் என்று தான் பொருள்களுண்டு. மழித்தல் என்றால் அழித்தல் என்ற ஒரு பொருளும் உண்டு. நீட்டல் என்றால் பெருங்கொடை கொடுத்துக் காத்தல், ஈதல் என்றே : பொருள்களும் உள்ளன.