பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா துறவி என்றதும் மயிரை மழித்தல், நீண்ட சடை முடி வளர்த்தல் என்று அவசர கதியில் பொருள் சொல்வார்களோ என்று தெரிந்து தான் மழித்தலும் நீட்டலும் என்ற சொற்களை போட்டிருக்கிறார். ஆக, விரும்பியவர்களுக்கு நிறைய பொருளை பெருங்கெடையாக ஈயவும் வேண்டாம், வேண்டாதவர்களின் வாழ்க்கையை அழிக்கவும் வேண்டாம். என்று போலித் துறவிகளை எச்சரித்து, உண்மைத் துறவிகளின் பெருமையை காக்க உயர் நெறியை காட்டுகிறார். ஆக, இந்தக் குறளுக்கு என்னுடைய புதிய உரை இப்படியாக அமைகிறது. - தவநெறியில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு பெருங் கொடை அளிக்கவும் வேண்டாம், மாறாக பிறர் வாழ்வை அழிக்கவும் வேண்டாம். உலகப் பெருமக்கள் பழித்து வெறுத்த அவமானம் தரும் காரியங்களை செய்யவும் வேண்டாம். நம் கண் முன்னே வாழ்கிற போலித் துறவிகள் பெண்ணாசை, பொன்னாசை மண்ணாசை கொண்டு வாழ்வதை பார்க்கிறோம், பத்திரிக்கைகளில் படிக்கிறோம், அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை போலித் துறவிகள் பெருகிக் கொண்டு தான் வருகிறார்கள். பொது மக்களும் ஏமாந்து தங்களது காசையும் கற்பையும் இழந்து கொண்டுதான் வருகிறார்கள். என்றாலும் , மனிதர்கள் மாறுவதில்லை என்ற உண்மைத் தத்துவம் தான் உலகில் உலா வந்து நிருபித்துக் கொண்டிருக்கிறது.