பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - - ll ஒவ்வொரு நாளும் பகலில் விழித்திருக்கும் போது நாம் பலதிறப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு மிகவும் களைத்துப் போகிறோம். இவ்வாறு உழைப்பிலும் ஒரு முகப்பட்ட முயற்சிகளிலும் ஏற்பட்ட களைப்பும், இளைப்பும் தீரும் பொருட்டுத்தான், நாம் இரவிலே விழிப்பு ஏற்படாமல் கனவுகளால் அலைக்கழிக்கப்படாமல், அரைத்துக்கம் குறைத் தூக்கம் என்று தூக்கமில்லாமல். நன்றாக விழிக்கையில் உடல் சுறுசுறுப்புடன் எழுகிறது. களைப்பு நீங்கிய உடம்பும் மனமும், மீண்டும் பணிகளை ஆற்ற முனைகிறது; விரைகிறது. தட்டுத் தடங்கலின்றித் தொடர்கிறது; ஆகவே, தூக்கம் என்பது, உழைப்பினால் உடம் பின் வழியாக உயிருக்கு வந்த களைப்பு நீங்கப் பெறுதற்கேயாம். சரியான உறக்கம் இல்லையென்றால உடலின் ஆற்றலில் சரிவு ஏற்படுகிறது. - உதாரணத்திற்கு ஒன்றைப் பார்போம். விளக்கு எரிகிறது. அதனால் எரிகின்ற திரியும் அகல் விளக்கில் இட்ட எண்ணெயும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டேவருகிறது. மீண்டும் எண்ணெயும் திரியும் இருந்தால் விளக்கு எரியும். இல்லையேல் ஒளியும் இல்லை. விளக்கினால் பயனும் இல்லை. - அதுபோலவே, நமது உடம்பும் மூளையும் பணியில் ஈடுபடுகிற போது இரத்தமாகிய எண்ணெயும் திரியாகிய மூளைச் செல்களும் மற்றும் நரம்புகளும், களைத்துப் போகின்றன. வலிமை குன்றுகின்றன. - அதற்காகத்தான் உடம்பானது உணவைக் கேட்கிறது. தாகத்தை ஏற்படுத்தித் தண்ணிரைக் குடிக்கிறது. சோறும் தண்ணிரும் உடலுக்கு வலிமை ஏற்பட உதவுகின்றன என்றால் அவைகளுக்கு மேலும் உதவத்தான் உறக்கம் வருகிறது. - தூக்கம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று அறியாமை என்னும் இருளில் ஏற்படும்தூக்கம்.இது சாதாரணமாக, எல்லா