பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா உயிரினங்களுக்கும் ஏற்படும் - இரவில் உள்ள இருளில் தூக்கம். - . - இரண்டாவது அரிதுயில் என்பது, பொதுவாகத் தவத்தில் உள்ளவர்கள் அல்லது புலனடக்கம் நிறைந்தவர்கள், மற்றும் மெய்யறிவு பெற்றவர்கள் இடத்து ஏற்படும் அருளில் தூங்கும் தூக்கம். - " - - - "ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச் சுட்டெரித்து தாங்கிச் சுகம் பெறுவது எக்காலம்' என்று பெரியார்கள் ஏங்கிப் பாடியதைக் கேட்டீர்களா! இங்கே நாம் குறிப்பிடுவது செத்த நிலை போல உறங்குவது என்பது. சுகமான நித்திரை. ஆழ்ந்த நித்திரை. அல்லது நிம்மதியான நித்திரை என்றுகூட நாம் கூறலாம். இப்படி செத்துக் கிடப்பதுபோல எப்போதுதுக்கம் வருகிறது? உடலில் தொல்லைகள் இல்லாத போதும் மனத்தில் கவலைகள் இல்லாத போதும்தான். ... " குறை வயிற்றுக்காரனுக்கும் குத்துப்பட்ட மனிதருக்கும் தூக்கம் குறைவு. தூக்கமே வராது என்பது பழமொழி. - உடலும் மனமும் வலிவாகவும் தெளிவாகவும் இருந்தால் தான், செத்திருப்பது போல உறக்கம் வரும். இதைத்தான் விழித்திருக்கும் போதே, பயிற்சி செய்திடச் சவாசனம் என்னும் ஆசனப் பயிற்சியை அறிவாளர்கள் மேற்கொண்டார்கள். மல்லாந்து படுத்துக் கை கால்கள் உறுப்புக்களைத் தளரவைத்து மனத்தை ஒருமுகப்படுத்திச் சவம் போலக் கிடக்கும் உறக்க நிலை. இதில் உறங்கவும் கூடாது. - விழித்திருக்கவும் கூடாது என்ற புலன் அடக்க நிலை. இப்படிப்பட்ட இனிய நிலையை ஆஸ்கார் ஒயில்டு என்னும் ஆங்கிலக் கவிஞன் இப்படிப் பாடுகிறான். - - - - 'Death is the brother of sleep'. - ". . இறப்பின்உடன்பிறப்புதான் உறக்கம். இதையே அப்துல்