பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா நிலையாமை என்பது 34 ஆம் அதிகாரம். நிலையாமை என்றால் எல்லோரும் நிலை + யாமை என்று பிரித்து, யாமை என்றால் இல்லை என்றும், நிலை இல்லாமை என்றும் வாழ்வுக்குப் பொருள் கூறினார்கள். நிலை இல்லை என்பதை வள்ளுவர் மிகச் சாதாரணமாகவாசொல்லியிருப்பார் அதன் உள்ளே மறைந்து கிடக்கும் உண்மை என்று தெரிந்து கொள்ள நிலையாமை என்ற சொல்லைப் பிரித்துப் பார்த்தேன். நிலை + யாம் + மெய் என்றுபிரிந்து கொண்டது. யாம் என்றால் எனது மெய்ந்நிலை என்றால் உண்மை நிலை. உடம்பு நிலை என்று பொருள் வந்தது. - - நமது உடம்பு நிலையில்லாதது என்பதைவிட நமது உடம்பின் உண்மை என்ன? உடம்பின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கும் போது நமக்குப் பல புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. அவற்றையும் பார்ப்போம். நமது உடம்பின் சக்தியானது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது, நலிந்து கொண்டே வருகிறது என்பது மெய்நிலை. - அரிய சக்திபெற்ற மனித உடலை இப்படி அநியாயமாக அழிய விடாமல், சக்தி இருக்கிற பொழுதே சாதித்துக் கொள்; காலத்தை வீணாகக் கழிக காதே’ என்பதுதான் உண்மைநிலை - - - இந்தக் கருத்தைத்தான் உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்று பாடி வள்ளுவர் வலியுறுத்தினார். . -