பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் o 15 2. உடம்பும் உயிரும் 2. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - - - (340) நிலையாமை அதிகாரத்தில் வருகிற பத்தாவது குறள், கடைசிக் குறள் இது. இதற்குப் பொருள் எழுதியவர்கள் தந்த கருத்துகள் இவைதாம் 'வாத முதலியவற்றில் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு எஞ்ஞான்றும் இருப்பதோம் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்' என்று பரிமேலழகர் இதற்கு உரை எழுதிச் சென்றார். உடம்பின் ஒரு பக்கமாக உயிர் ஒதுங்கியிருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று, இதன் பொருளே வேறு. துச்சில் என்றால் ஒதுக்கிடம், சரீரம், தங்குமிடம் என்று பல பொருள்கள் உண்டு. புக்கில் என்றால் உடல், வீடு, தங்குமிடம், புகலிடம் என்று பல அர்த்தங்கள் உண்டு. - - கொல் என்றால் ஒரு அசைச் சொல். பூட்டு, ஒர் ஐயப் பொருளில் வரும் இடைச் சொல். பெரும்பாலும் செய்யுளில் வரும் ஒர் அசைநிலை. குறுக்குத் தாழ் என்று பல பொருட்கள் உண்டு. -- - நான் மற்றவர்கள் துச்சில் என்பதற்கு ஒதுக்கிடம் என்று கூறியதை தவிர்த்து, தங்குமிடம், புகலிடம் என்று பொருள் கொண்டிருக்கிறேன். கொல் என்றால் எல்லோரும் அசைச் சொல் என்று அர்த்தம் கண்டனர். இங்கே நான் பூட்டு, குறுக்குத்தாழ் என்று பொருள் கொண்டிருக்கிறேன். இங்கே நான் கூறவந்த பொருளை இப்பொழுது தொகுத்துக் கூறுகிறேன். - - உடம்பின் உள்ளே முழுவதுமாக நிறைந்து தங்கியிருக்கும் உயிர் புகுந்த இடமான உடல், என்றும் நிலைத்திருப்பது போல், அடைத்துக் காக்கினர்ற