பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - . I7 இன்னொன்று, உடலில் காயம்பட்டோ அல்லது தீப்பட்டோ இருந்தால் அந்த இடத்திற்குச்சரியான இரத்தமும் உயிர்க்காற்றும் போகாமல் இருப்பதால்தான் அந்த இடம் கறுத்துப் போகிறது; கன்றியும் போகிறது; அழுகும் நிலைக்கு ஆளாகிறது. - மீண்டும் அந்தப் பகுதிக்குள் உயிர்க்காற்று போகிறபோதுதான் பாதிக்கப்பட்ட உறுப்புக்கள் பழைய நிலையை அடைகின்றன; புத்துணர்ச்சி பெறுகின்றன. ஆகவே, உயிரானது ஒதுங்கியிருந்தால், உடல் உறுப்புகளுக்கு வாழ்வும் இல்லை; வளர்ச்சியும் இல்ல்ை; செயல்பாடும் இல்லை. - எனவே உடல் முழுவதும் உயிர் இருக்கிறது என்பதுதான் இன்றைய உடலியல் வல்லுநர்களின் அரிய கருத்தாகும். - இப்படி உடல் முழுவதும் புகுந்து தங்கியிருக்கின்ற (காற்று) உயிர்க்காற்றானது பத்து விதமாகப் பிரிந்து தமக்குரிய தொழிலைத் தொய்வுறாமல் செய்து வருகின்றது என்ற உண்மை நிலையையும் இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். - - பிராணன் என்கிற உயிர்க்காற்றானது பத்துவிதக் காற்றாகப் பிரிந்து கொள்கின்றன. பிராணன், அபாணன், சமானன், வியானன், உதானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்றெல்லாம் அதற்குப் பிரிவு சார்ந்த பெயர்கள் உண்டு. இனி அந்தப் பிரிவுக் காற்றின் பணிகளையும் இங்கே காண்போம். 1. பிராணன்: - சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதுடன் இதயப் பகுதி முழுவதையும் சரியாக இயக்கும் பணியைச் செய்கிறது; 2. அபாணன்: உடலில் உள்ள கழிவுப் பொருட்களை உரிய முறையில்