பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 3. நாளும் வாளும் நிலையாமை என்றால், நிலை இல்லை என்றும், நிலையில்லாத வாழ்வு என்றும் பிரித்துப் பொருள் தந்திருக்கின்றார்கள் பலர் நிலையாம்மெய் என்று பிரித்து, நம் உடம்பின் நிலை என்ன? உண்மை நிலை என்ன? என்று நாம் பிரித்துப் பொருள் கண்டிருக்கிறோம். விளக்கமும் தந்திருக்கிறோம். நிலையாமை என்ற அதிகாரத்தில் நான்காவதாக வருகின்ற பாடல்பற்றி இப்போது பார்ப்போம். நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் - வாள்.அது உணர்வார்ப் பெறின் " . - (334) நாள் ஒன்று வந்து போவது, உயிரை அறுக்கின்ற வாளாக இருப்பதை, அறிவுடையோர் உணர்வார்கள் என்பதாகப் பொருள் கூறுவதாக, எல்லா உரைகளுமே இருக்கின்றன. புதியதான பச்சை மண்குடம் ஒன்று இருக்கிறது. அதற்குள்ளேதண்ணிரைமுழுவதுமாக நிறைத்து வைக்கிறோம். அதிலிருந்து அந்த நீர் ஆவியாகிப் போய் விடாமல் இருப்பதற்காக, நல்ல மூடியாக அல்லது கனமான துணி ஒன்றால், அதன் வாயை மூடிக் கட்டி, காற்றுகூட உள் நுழையாதவாறு காத்துவிட முயற்சிக்கிறோம். நமக்குள்ளே ஒரு நம்பிக்கை தண்ணிர் பத்திரமாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது என்ற பெரும் திருப்தியுடன் இருக்கிறோம். சில நாட்கள் கழிகின்றன. o " . - சிந்தையிலே பரபரப்புடன் பானையின் வாயிலில் கட்டியிருந்த துணிக்கட்டை அவிழ்த்து விட்டு உட்புறம் பார்க்கிறோம். - வாய்வர்ை அலையாடிக் கொண்டிருந்த தண்ணிரின் அளவு, அப்படியே இல்லை. அளவு குறைந்திருக்கிறது. இருந்த தண்ணீர் எங்கே போயிற்று மண்குடம் குடித்து விட்டதா? மறைத்தபோதும் சூரியக் கதிர்கள் நுழைந்து குடித்து விட்டனவா? - - - ,