பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - - 25 அப்பொழுதுதான் பயனுள்ள வாழ்வு வாழமுடியும். வாள் என்பதற்குச் சத்தி என்பது போல, ஞானம் என்றும். அர்த்தம் உண்டு. அதனால்தான் வாள் இது என்றார். மிகுந்த ஞானம் கொண்டு, உயிரைக் காக்கும் கலையைத் திறம்படச் செய்து வாழ வேண்டும். இதைத்தான் உணர்வார்ப் பெறின் என்றார். எப்போதும் உயிரின் உயிர்ப்புச் சக்தியைப் பகல்போல வைத்து , இரவு நேரத்தில் மாறுபடுகிறபோதும், காத்துக் கொண்டு உயிரைக் காப்பதும் உடலை வளர்ப்பதும் உயர்ந்த ஞானம் (இது) என்கிறார். அந்த ஞானம் ஆராய்ந்து தெளிகிற, பகுத்தறியும் பண்பாளர் யாவர்க்கும் வரும் என்கிறார் வள்ளுவர். -- - - - நாள் வந்து உயிரை அறுக்கும் வாளாக இருக்கிறது assisi.g. soilosopá šiššansassMegative thinking) நாள் வந்து உயிருக்கு ஒளிதருகிறது.ஒவ்வொருவருக்கும் வளமாக வாழ்கிற ஞானத்தைத் தருகிறது என்பது உந்து முறைச் சிந்தனை (Positive thinking) ஆமாம் நடைமுறைச் சிந்தனை. - ஆகவே, நாள் வருகிறது. வந்து போகிறது. அந்த நாளை வீணாக்காமல், ஆற்றலை வளர்த்து, அரிய வாழ்வு வாழ வேண்டும். இந்த உலகில் நிலைக்காமல் போகிறதாக உடல் உயிர் இருந்தாலும், நிலைத்து வாழ்கிற பேறுடன் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்னும் சிந்தனையைத் தருகிற செந்தமிழ்க்குறள், நமது சிந்தையைமயக்கும் குறள் அல்லவா? அந்த ஞானம் பெறுவோம்; ஆனந்தவாழ்வு வாழ்வோம்.