பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா - - 4. கற்க நிற்க கற்க கசடற கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக. . . (401) தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் தெரிந்த எல்லோருக்குமே தெரிந்த குறள் இது. - ஒருமுறை படித்தாலே போதும். உள்ளத்தில் பதிந்து விடும். படித்தவர்கள் மறந்தாலும், இந்தக் குறள் அவர்களை மறக்க விடாது. - - -- - பாட்டின் அர்த்தமும் எளிதுதான். இனிதுதான். படித்ததுமே பாட்டுக்குப் பொருள் தெரிந்து விடுகிறதே! என்று பாராட்டிப் பேசுபவர்களே அதிகம். " . - இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தப் பாட்டுக்குச் சொல்லப்படுகின்ற அர்த்தமும் - சுவையானதுதான். சுகமானதுதான். - கற்பவை கசடு அறக் கற்க கற்றபின் நிற்க அதற்குத் தக. என்று பாடலைப் பிரிப்பார்கள். அதற்குரிய அர்த்தமும் இப்படித்தான் இருக்கும். கற்றுக் கொள்ளும் நூல்களைக், குற்றம் இல்லாமல் கற்றுக் கொள்ள வேண்டு ம். படித்தபின் அக் கல்விக்குத் தகுந்தபடிநிற்க - வேண்டும் என்பது மேலோட்டமான பொருளாகும். அப்படியென்றால், ஆழமான பொருள் ஏதாவது இதில் உண்டோ? எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது? என்று ஒரு வினா வீசப்படுமானால், அதுவும் சரியான கேள்விதான். குற்றமறக் கற்க வேண்டும்.கற்றபடி நடக்க வேண்டும் என்றால், எதைக் கற்க வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்?