பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - - 27 இதுதான் கேட்கப்படும் கேள்வி. நல்ல நூல்களைக் கற்க வேண்டும் என்பது நியாயம் தானே. ஆனால் நல்ல நூல்கள் என்றால் @Tഞഖ ? நல்ல நூல்களில் என்ன செய்திகள் இருக்கும்? நீதி, நியாயம், ஒழுக்கம் சார்ந்தவை எல்லாம் நல்ல பொருள்கள். அவற்றைக் கூறுகிற நூல்களே நல்ல நூல்கள். இதுவும் நல்ல விளக்கமே. தான் செய்கிற செயல்கள், எல்லாமே தர்மத்திற்குத் தான், என்று திருடன் பேசுகிறான். முரடன் பேசுகிறான். அநியாயக் காரன் பேசுகிறான். - - ஒருவர் விரும்பும் உணவு, மற்றவருக்கு விஷம் என்பது போல, ஒருவர் செய்யும் செயல் மற்றவருக்குத் தவறாகத் தெரியும். தர்மமில்லாததாகத் தெரியும். இப்படித்தான் விவாதம் விரிகிறது. - - - - ஆகவே, எப்படிப்பட்ட நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்றுதான், வள்ளுவர் கூறியிருக்கிறார். நூல்களைக் கூறாமல் கசடறக் கற்க வேண்டும் என்றால், எதைக்கற்க வேண்டும்? என்று புதிய குறிப்பு ஒன்று புறப்படுகிறதே!. - உண்மைதான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற் தகாகத்தான், திருவள்ளுவரும், தமது தெய்வப் புலமையால், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை (க) கசடற கல். கற்றபின் (க) அதற்குத்தக நில் - கல என்றால் தோண்டு, அகழ்ந்து பார், கற்றுக் கொள் என்று பல பொருள்கள் உண்டு.