பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 29 அணுகாமலும் நெருப்பைப் பயன்படுத்திக் கொள்வது: சூரியனின்கதிர்களை, உடலுக்குள் எப்படி ஏற்றுக் கொள்வது? வியாதி வராமல் உடல் நோகாமல், விவேகமாக எப்படி வாழ்வது காமத்தை உப்பு போன்று பயன்படுத்துவது போன்ற நெறிமுறைகளை யெல்லாம், கசடறக் கற்றுக் கொள்ள வேண்டும் . - எமன் எப்போதும் எட்டிய தூரத்தில்தான் இருக்கிறான் என்பதை எண்ணிக் கொண்டாலே, ஒழுக்கமானவற்றை உறுதியாக கற்றுக் கொண்டுவிடலாம். கல் என்பது வி சேருகின்ற போது, கல்வி ஆகிறது. வி என்றால் அறிவு என்று அர்த்தம். - அறிவு வளர, நிறைய பெருகக் கற்றுக் கொள் என்பதும், அதற்காகத் தொடர்முயற்சி வேண்டும் என்பதுதான் மரபு. உ என்பதற்கு, உள்ளும் புறமும் சுட்டுகின்ற சொல் என்று சொல்வார்கள். அகமும் புறமும் என்றும் கூறலாம். உடலுக்கு உள்ளே இருப்பது அகம். உடலை விட்டு வெளியே இருப்பதெல்லாம் புறம். அதாவது இயற்கையில் இனிய பிரதேசங்களும், பொருள்களெல்லாமும் சுகமும் புறமும் தாம். அகத்தையும், புறத்தையும் அறிந்து கொள்கிற அறிவுதான் உண்மையான அறிவு. அதுவே மெய்யறிவாகும். - இப்படி மெய்யறிவு உண்டாவது போல, கசடறக் கற்க வேண்டும். அப்படிக் கற்றபின், அதற்குத் தகந்தாற்போல் நிற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். * * - நில்+க என்பதுதான் நிற்க என்பதாயிற்று. எப்படி நிற்க் வேண்டும் என்றால், க. வைப் போல, இயற்கை போல கடமையாற்ற வேண்டும். எல்லோருக்கும் உதவ வேண்டும்