பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - - 31 5. கேளிர் கேளிர் பகர் சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர். (187) புறங்கூறாமை என்னும் அதிகாரத்தில், ஏழாவது பாடல் இது. இந்த உலகத்து மக்களின் உண்மை வாழ்க்கை நிலையை, வெளிப்படையாக விமர்சித்துவிளக்கம் கூறும் வித்தியாசமான குறள் இது. கேளிர் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், யாதும் ஊரே யாவரும் கேளிர், என்னும் பாடல் வரிதான் உடனே நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தமிழரின் பெருமையை உயர்த்திப் பேசும் வரி இது. கேளிர் என்றால், நண்பர் சுற்றத்தார், உறவினர், என்று பல பொருட்கள் உண்டு. - - கேள் என்றால், அன்பு, உறவு, சிநேகிதம், சுற்றம், மதிப்பு, இனம் என்பதுடன், சகி, பொறு, கொடுக்கச் சொல் என்று பல அர்த்தங்கள் உண்டு. அர்த்தங்களை முதலில் புரிந்து கொண்டால்.அடுத்தது கூறும் போது, தொடுத்து நினைவுபடுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். புறங் கூறக்கூடாது என்பதை வற்புறுத்த வந்த வள்ளுவர், யார்புறங் கூறக்கூடாது என்பதை விளக்குவதற்குத்தான் இந்தப் பாடலைப் பாடினார். ஆனால், அவரையும் அறியாமல், உற்றதும் உள்ளதும் உணர்ந்து, உண்மையுமான கருத்து ஒன்றைக், கச்சிதமாகப் பாடிவிட்டார். - - - - - இதுவரை, இந்தப் பாடலுக்குப் பெரியவர்கள் எழுதிச் சென்ற உரையை முதலில் பார்ப்போம், . . . .