பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 37 - சிறப்பு ஒவ்வா பிறப்பும் எல்லா உயிர்க்கும் ஒக்கும். செய் தொழில் வேற்றுமையான என்று நான் குறளைப் பிரித்துப் பார்க்கிறேன். - பிறப்பு என்பது ஒரு ஆணும். பெண்ணும் கூடுகிறபோது உண்டாகிற கரு, உருவாகி, குழந்தையாகப் பிறக்கிறது என்பது பொதுத் தன்மை. இந்தப் பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒக்கும் என்பது, எல்லோரும் அறிந்தது. உணர்ந்ததுதான். இந்தப் பொதுக் கருத்தையா வள்ளுவர் பெரிதுபடுத்திப் பாடியிருக்கிறார் என்றால் இல்லை. அவர் சொல்ல வந்த கருத்து, இந்தச் சமுதாயத்தின் சங்கட்மான பல சூழ்நிலை களைச் சுட்டிக் காட்டி விளக்கத்தான். - பிறப்பு என்றால் புரிகிறது, சிறப்பு ஒவ்வாப் பிறப்பு என்று சொல்கிற போது குழப்பம் விரிந்துக் கொள்கிறது அல்லவா! - - - தமிழ்நாட்டுச் சமுதாயச் சூழ்நிலையை வள்ளுவர். குறித்துக் காட்டுகிற விளக்க்மே. - - தமிழ்ச் சமுதாயம் வீரத்திற்கு முக்கியத்துவம் அளித்தது போலவே, கற்புக்கும் முதலிடம் கொடுத்துப் போற்றியது. வாழ்வின் எல்லா நிலைக்கும் ஒழுக்கம் வேண்டும். அது உயிர் போன்றது என்று வற்புறுத்திய தமிழினம், ஆண் பெண்ணின் ஒழுக்கம் பார்த்தது; கற்பைப் பார்த்தது. இந்த இரண்டில் சிறந்தவர்களை உயர்ந்த குலம் என்று போற்றியது. ஒழுக்கத்திலிருந்து, கற்பிலிருந்து வழுக்கியவர் களை இழிந்தகுலம் என்று ஒதுக்கியது. - அறநிலையில் மணம் புரிந்தவர்க்குப் பிறக்கும் பிள்ளைகள்.மற நிலையில் மணம் புரிந்தவர்க்குப் பிறக்கும் பிள்ளைகள். தவறான வழியில் உருவாகிப் பிறக்கும் பிள்ளைகள் என்று நாம் பலவகைப் பிரிவுகளை இன்றும் காணலாம். இத்தகைய குறிப்புகளைத்தான் பிங்கல நிகண்டு அன்றே பெரிதும் விரித்துரைக்கின்றது. . . . -