பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 o டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா நலிந்தாலும், இழந்தாலும், உடலின் நலத்தன்மை அழிந்து விடுகிறது. வாழ்வதற்காக ஒவ்வொரு மனிதனும் ஒருவிதமான செயலை, தமக்குத் தெரிந்த முடிந்த தொழிலைச் செய்து மக்களுக்கு உதவுகின்றார்கள். மக்களைக் காக்கின்றார்கள். நாட்டை உயர்த்துகின்றார்கள். - - தொழிலில் கேவலம் பார்க்கும் நாடு, பகைவர்கள் அழிக்காமலே அழிந்து போய்விடும் என்று சமூக இயல் பேசுகிறது. ஆகவே, செய்கிற தொழிலின் சிறப்பு பார்த்து, புகழுங்கள். பெருமைபடுத்துங்கள். செய்கிற தொழிலையே இழித்தும் - பழித்தும் பேசாதீர்கள். தொழிலை வைத்து மக்களைப் பிரிக்காதீர்கள். அழிக்காதீர்கள் என்று பிரஞ்சுப் புரட்சி செய்த சீரமைப்பு போல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சமதர்ம சமுதாயம் காணவிழைந்தார் வள்ளுவப் பெருமகனார். - சிறப்பு, ஒவ்வாத பிறப்பே. எல்லா உயிர்க்கும் ஒத்ததாக இருக்கிறதே! சிறப்பு உள்ள எல்லா வகையான தொழிலிலும் பேதம் பார்ப்பதைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றே பாடுகிறார். இப்பொழுது மீண்டும் இந்தக் குறளைப் படியுங்கள். புதிய பொருளின் பிரகாசம் தெரிகிறதல்லவா? ஆகவே பிறப்பால் சிறப்பு பார்க்காதீர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் உடலுக்குள்ளே, திறமையும், தேர்ச்சியும் நிறைந்திருக்கிறது. அவர்கள் செய்யும் தொழிலின் சிறப்பைப் பாருங்கள். ‘. . - இந்தக் காலத்துக்கும் இது எவ்வளவு பொருந்துகிறது பார்த்தீர்களா! . - - நாம் மனிதரைப் பார்ப்போம். அவர் செய்கிற புனிதத்தைப் போற்றுவோம். அவர்க்குரிய பெருமையைச் சேர்ப்போம். அதுதான் மனிதப் பண்பின் மாட்சிமையும் மகிமையும் ஆகும்.