பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உலகில் உள்ள பொல்லாத மூன்று ஆசைகள்: மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பார்கள். மண்விழைவார்க்கு மானமில்லை. பொன்விழைவார்க்கு நாணமில்லை. - - பெண் விழைவார்க்கு ஈனமும் இல்லை . எதுவுமே. இல்லை என்று பாட்டாகப் பாடி வைத்திருக்கின்றார்கள். 1. மண், பொன் ஆசைகள் உலக அளவில், உடல் அளவில் துறந்து கொண்டு மனைவியுடன்கானகம் சென்று வாழ்தல். இது மனப் பக்குவம் அடைகிறவரையில், ... " 2 பிறகு மனைவியையும் துறந்து, தனித்து நின்று தவ வாழ்வைத் தொடங்குதல். அப்படித் துறந்தாலும் சுகத்திலே அவை நின்று நிழலாடுவதால், முழுதுமாக இல்லை என்பது அடுத்த நிலை. 3. அடுத்து அறநிலை. அறுதல் என்றால் உறவே அல்லது தொடர்பே இல்லாமல். அற்றுப் போய்விடுதல். உடலாலும் மனத்தாலும் உலக ஆசைகளை அறுத்து விடுதல். 4. நான்காவது இறு நிலை, இறுதல் என்றால் இற்றுப் போதல், எந்த நிலையிலும் உலக வாழ்வினுள் ஊடாடி விடாமல் அதற்கும் மேலே நின்று ஆட்சி செய்தல். எண்ணங்களினால் உலக பந்தங்கள் எல்லாம் இற்றுப் போகிற நிலையே இறுநிலை. அதுவே இறைநிலை ஆயிற்று. அதனால்தன் அத்தகையோர் இறைவன் என்று புகழப்பட்டனர். அப்படிப்பட்ட துறந்தவருக்குப் பெருமை எப்போது பெருகும் என்றால்; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு ஒழுக்கத்தில் நிலைத்து நிற்கும்போதுதான். பனுவல் துணிவு என்பது தூய நூல்களின் சிறந்த வழிகாட்டல்கள் ஆகும். அப்படிப்பட்ட நூல்களின் மேன்மை மிக்க வழிகள் ஒழுக்கம் காத்து வருவதே நீத்தார்க்குப் பெருமையாகும். * . . . . . - .